FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 25, 2015, 06:58:41 PM
-
வெத்தலை-பூண்டு சாதம்
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11752425_1475374822759988_8087973404662559039_n.jpg?oh=bf9c9362f285fa72a80c5f0984efa9d2&oe=5656827A&__gda__=1447251013_9c253af0622122226dbeabba8f5bec56)
தேவையான பொருட்கள்:
வெற்றிலை – 3
சீரக சம்பா அரிசி – 1/4 கிலோ
பூண்டு – 5 பல்
சோம்பு – 1/2 டீ ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
ஸ்பெஷல் மசாலா – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
ஸ்பெஷல் மசாலாவுக்கு:
கருப்பு எள் – 1 டீ ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சுக்குப் பொடி – 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 5
விரலி மஞ்சள் – அரை இன்ச்
உப்பு – தேவைக்கேற்ப
எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
செய்முறை:
* அரிசியை உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் நெய் விட்டு, பட்டை, சோம்பு வறுக்கவும்.
* பூண்டு சேர்க்கவும்.
* வெற்றிலையை நறுக்கிச் சேர்க்கவும்.
* ஸ்பெஷல் மசாலா பொடியும் உப்பும் சேர்த்து, தண்ணீர் தெளித்து வதக்கவும்.
* வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, தீயைக் குறைத்து ஒரு கை தண்ணீர் தெளித்துக் கலந்து, மூடி வைக்கவும்.
* 3 நிமிடங்கள் கழித்துக் கிளறி இறக்கவும்.