FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 25, 2015, 06:54:54 PM

Title: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on July 25, 2015, 06:54:54 PM
பாட்டி வைத்தியம்

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11760039_1475375636093240_6274307755926117569_n.jpg?oh=8943c3a0f9ce760b0dcc67e1dbc05d99&oe=56142E63)

மருதாணி இலையைப் மையாக அரைத்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்க வாய்ப்புண் தீரும்.

*ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து நன்கு உலர்த்தி சூரணம் செய்து காலை,மாலை 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் படிப்படியாக குறையும். .

*நவாச்சாரத்தை முட்டையின் வெள்ளைகருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தொண்டைப்புண் தீரும்.

*அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண வர ஒற்றை தலைவலி மற்றும் தீராத தலைவலி கூட தீரும்.

*முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடிய ஆரம்பிக்கும்.