FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 25, 2015, 09:06:43 AM

Title: ~ தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க ~
Post by: MysteRy on July 25, 2015, 09:06:43 AM
தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11705269_1474024636228340_7795908669633663157_n.jpg?oh=e1927fa5b315e2dfd3f3a20b95cb60b8&oe=56157B14)

தலை முடி நன்கு வளர…தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.

முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

முருங்கைகீரை – 2 கப்
வெண்ணெய் 1 – டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.