FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on December 25, 2011, 10:54:06 PM

Title: கர்ப்பவதிகளுக்கு
Post by: Global Angel on December 25, 2011, 10:54:06 PM
கர்ப்பவதிகளுக்கு
கிருபானந்த வாரியாரின் அறிவுரை


          தலைசிறந்த ஆன்மீகவாதியும் தன் தமிழ்ப் பேச்சால் உலகத் தமிழர்களைக் கவர்ந்த உன்னதமானவருமான திருமுருக கிருபானந்தவாரியார் தன்  ஆன்மீகச் சொற்பொழிவுகளில் மக்களின் அன்றாட நிகழ்வுகளை கலந்து சொல்வதில் அவருக்கு  நிகர் அவர்தான்.

ஆன்மீகம் மட்டுமே மனிதனை உயர்த்தாது, ஆரோக்கியமான உடலும் ஆன்மீகத்திற்கு முக்கியம் என்று கூறுவார். அவருடைய அறிவுரைகள் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில்  இருக்கும்.

மருத்துவ ரீதியாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்  கூறிய அறிவுரைகள்.

· கர்ப்பவதிகள் தினசரி பசும்பாலில் நல்ல குங்குமப்பூ கலந்து அருந்தினால், சிகப்பான குழந்தை  பிறக்கும்.  சுகப் பிரசவம் ஆகும்.

· கர்ப்பவதிகள் தினசரி ஆரஞ்சுப் பழரசம் அருந்தினால் அழகான குழந்தை பிறக்கும்.

· மேடு பள்ளமாகவும், கடினமாகவும் உள்ள இடங்களில் இருத்தலும், படுத்தலும் கூடாது. 

· உசிதமில்லாத உடற் பயிற்சிகள் செய்யக் கூடாது.

· அதிக உஷ்ணமுள்ள பதார்த்தங்களை உண்ணக் கூடாது.  உடம்பில் யாதொரு அடியும் படக்கூடாது.  பயம் உண்டாகக் கூடிய இடங்களைப் பார்க்கக்  கூடாது.

· மிகக் கடுஞ் சொற்களைக் கேட்பது கூடாது. மிகவும் களைப்பைக் கொடுக்கக்கூடிய வாகனங்களில் செல்லக் கூடாது.

· மேல்நோக்கிப் படுத்தால் குழந்தையின் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிக் கொள்ளும். 

· இரவில் சஞ்சாரம் செய்தால் குழந்தைக்கு சித்த பிரம்மை உண்டாகும். 

· சண்டை கலகங்களில் ஈடுபட்டால் குழந்தைக்கு காக்கா வலிப்பு ஏற்படும். 

· சதா வருத்தத்துடன் உள்ள வர்களுக்கு பயப்படும் சுபாவம் உள்ள குழந்தை பிறக்கும். 

· கர்ப்ப காலத்தில் பிறருக்கு கெடுதியை நினைத்தால் பிறக்கும் குழந்தை பிறரை இம்சிப்பவனாகவும் பொறாமை உள்ளதாகவும் இருக்கும்.

· கர்ப்ப காலத்தில் சதா தூங்கிக்கொண்டே இருந்தால் பிறக்கும் குழந்தை சோம்பல் புத்திகுறைவு, அக்கினி பலம் குறைவு ஆகிய இவைகளோடு இருக்கும்.

· மதுபானம் கர்ப்பகாலத்தில் குடித்தால், பிறக்கும் குழந்தை சஞ்சல புத்தி உடையவனாக பிறக்கும்.

· இனிப்பு அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை சர்க்கரை வியாதி, ஊமைத்தன்மை, அதிக பருமன் ஆகியவை உண்டாகும்.

· அதிக புளிப்பு சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு இரத்த பித்தம், தோல், கண் வியாதிகள் ஏற்படும்.  கசப்பு அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை உடம்பு உலர்ந்தும் பலம் குன்றியதுமாகவும் இருக்கும்.  துவர்ப்பு அதிகம் சாப்பிட்டால் கருத்த மேனியும் பொருமல்  வியாதியும் வாத ரோகங்களுடைய குழந்தை பிறக்கும்.
Title: Re: கர்ப்பவதிகளுக்கு
Post by: RemO on December 28, 2011, 06:41:01 AM
Quote
கர்ப்பவதிகள் தினசரி பசும்பாலில் நல்ல குங்குமப்பூ கலந்து அருந்தினால், சிகப்பான குழந்தை  பிறக்கும்.  சுகப் பிரசவம் ஆகும்.

· கர்ப்பவதிகள் தினசரி ஆரஞ்சுப் பழரசம் அருந்தினால் அழகான குழந்தை பிறக்கும்

Intha 2 karuththum maruththuva reethiya unmai ilainu solurangaley :S:S:S
Title: Re: கர்ப்பவதிகளுக்கு
Post by: Global Angel on December 29, 2011, 05:58:20 AM
ஆரஞ்சு என்பது  வைட்டமின் c  அது தோல் கண் முடி இவற்றுக்கு அவசியமான ஒன்று .. இதை சாப்டல் கற்பதில் இருக்கும் குழந்தைக்கும் அதிகளவில் கிடைக்கும் .. எனவே குழந்தை ஆரோக்யமாக பிறகும் ஆரோகியம்தானே அழகு ...

குங்கும பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது .... அனால் வெள்ளையாக பிறக்கும் என்பதில் எனக்கும் சந்தேகம்தான்