FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 22, 2015, 10:12:43 PM
-
ஸ்பிரிங் ரோல்ஸ்
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11751942_1473083126322491_1050748209680341654_n.jpg?oh=52ac26530d7a9d87205b056883df6822&oe=5614B109)
தேவையானவை: மைதா
– 1 கப், பட்டன் காளான் – 12, பசலைக்கீரை – 1 கட்டு, வேகவைத்த சோளமுத்துக்கள் – அரை கப், சிஸ் துருவல் – கால் கப், பால் – 1 கப், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கார்ன்ஃப்ளார் – ஒன்றரை டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
மைதாவுடன் சிறிது உப்பு சேர்த்து, சற்று இறுக்கமாகப் பிசையுங்கள். காளானையும் பசலையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
வெண்ணெயை உருக்கி, பசலைக்கீரை, காளான் இரண்டையும் சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும், வேகவைத்த சோளம், மிளகுத்தூள், சிஸ் சேருங்கள். அத்துடன், பாலில் கார்ன்ஃப்ளாரைக் கரைத்துச் சேர்த்து நன்கு கிளறுங்கள். இறக்கி ஆறவிடுங்கள்.
பிசைந்த மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து மெல்லிய சப்பாத்தியாக திரட்டுங்கள். காளான் கலவையை ஒரு கரண்டி எடுத்து, ஒரு ஓரத்தில் நீளவாக்கில் வைத்து ஒரு முறை சுருட்டுங்கள். பின், பக்கவாட்டில் இருபுறமும் மடித்து, மீண்டும் சுருட்டி தண்ணீர் தொட்டு ஓரத்தை ஒட்டுங்கள். எண்ணெயைக் காய வைத்து, இரண்டிரண்டாக போட்டு நன்கு பொரித்தெடுங்கள்.