FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 21, 2015, 07:57:57 PM
-
பெங்காலி ஆலு மசாலா
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11760313_1471803123117158_2911430283803616604_n.jpg?oh=06b28cf202609b0c150e892ac9775df6&oe=561AF59C&__gda__=1448192675_668c7b7909094880cdc3514e71af7417)
தேவையானவை:
உருளைக்கிழங்கு – கால் கிலோ, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய், பட்டை – தலா ஒன்று, தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, வெங்காயம், தக்காளி – தலா 2, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தயிர் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, பெரிய துண்டுகளாக்கி எண்ணெயில் பொரிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தயாராக வைத்திருக்கும் மசாலா பொடி சேர்த்து வதக்கி… உப்பு, பொரித்த உருளை துண்டுகள், தயிர் சேர்த்து சுருள கிளறி இறக்கி, பரிமாறவும்.