FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 21, 2015, 07:53:12 PM
-
உடல் பருமன் குறைக்கும் சமையல் கொள்ளு சாதம்
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11695878_1471803469783790_1536945682497841212_n.jpg?oh=07320573e25bbbe51c97a50f39efb7ec&oe=5615CBF5&__gda__=1444513909_fe3462f2d962e1ac6035141aec188f42)
தேவையான பொருட்கள் :
வேகவைத்த கொள்ளு 1 கப்
வேகவைத்த சாதம் 2 கப்
எண்ணெய் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
சுக்கு பொடி 1 டீஸ்பூன்
கடுக்காய் பொடி 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
சின்ன வெங்காயம் 1 கப்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும், அதில் மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும், பின் வெட்டிய சிறிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும், பின் கொள்ளு, சுக்குப் பொடி, கடுக்காய்ப் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். அதன்பின் வேகவைத்த சாதம் சேர்த்து, கிளறி ஒரு நிமிடம் மூடிவிடவும். சூடாகப் பறிமாறவும்