FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 21, 2015, 07:40:49 PM

Title: ~ கோதுமையை விட சிறந்த வரகு அரிசி ~
Post by: MysteRy on July 21, 2015, 07:40:49 PM
கோதுமையை விட சிறந்த வரகு அரிசி

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/11751771_1472171429746994_39349989574753436_n.jpg?oh=ae885570f8f5887b8391c278b94ad146&oe=565C3834)

பண்டைய தமிழர்களால் அதிகளவில் உபயோகபடுத்தப்பட்ட சிறு தானியங்களின் பெயர்கள் கூட தற்போதைய தலை முறையினருக்கு தெரிவதில்லை. சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்ட நிலையிலும் செட்டிநாட்டுப் பகுதியில் சிறுதானியங்களில் பல விதமான பலகாரங்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

வரகு அரிசி, கோதுமையை விட சிறந்தது.இதில் நார்ச்சத்து அரிசி,கோதுமையை விட அதிகம்.வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும். இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது.

இதனை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தி இட்லி,தோசை,ஆப்பம்,பனியாரம்,பொங்கல்,பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம். இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம். நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

இதனை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தி இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம்,பொங்கல்,பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம்.