FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 20, 2015, 07:24:45 PM

Title: ~ பத்திய சமையல்! முருங்கை இலைப் பொடி!! சுண்டைக்காய்த் துவையல்!!! ~
Post by: MysteRy on July 20, 2015, 07:24:45 PM
பத்திய சமையல்! முருங்கை இலைப் பொடி!! சுண்டைக்காய்த் துவையல்!!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval_kitchen%2F2015%2F07%2Fndqyqy%2Fimages%2Fp80a.jpg&hash=4c6477c76b7156923206e32eb63a1f80150344c9)

உடல் சார்ந்த பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிப்பதுடன், வருமுன் காக்கும் வழிமுறைகளை வசப்படுத்தவும் உதவும் உணவு வகைகள்  நம் பாரம்பர்ய சமையலில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கிய வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும் வகையில், இந்த `பத்திய சமையல்’ பகுதியில் வழங்கி வருகிறார் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி. இந்த முறை அவர் அளிப்பது... சுண்டைக்காய்த் துவையல் மற்றும் முருங்கை இலை பொடி.



முருங்கை இலைப் பொடி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval_kitchen%2F2015%2F07%2Fndqyqy%2Fimages%2Fp80b.jpg&hash=07df07db040cc8d796d8494e4bfc26ee3e5708b6)

தேவையானவை:

சுத்தம் செய்த முருங்கை இலை - 2 கப்
எள் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் எள்ளை வறுத்துத் தனியே வைக்கவும். பிறகு, அதே வாணலியில், ஒரு சிறிதளவு எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடிக்கவும். மீதியுள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி, முருங்கை இலையை வதக்கவும். மொட மொடப்பாக வந்ததும் இறக்கிவிடவும்.
மிக்ஸியில் எள்ளைப் பொடிக்கவும். இதனுடன் உப்பு, வறுத்த முருங்கை இலை சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்து... முன்பு செய்து வைத்த பொடியைச் சேர்த்து,  ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... முருங்கை இலை பொடி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் வைத்தால், ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

பலன்கள் :

முருங்கை இலையிலும், எள்ளிலும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது ரத்த விருத்திக்கு உதவும். ரத்த சோகையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
Title: Re: ~ பத்திய சமையல்! முருங்கை இலைப் பொடி!! சுண்டைக்காய்த் துவையல்!!! ~
Post by: MysteRy on July 20, 2015, 07:27:01 PM
சுண்டைக்காய்த் துவையல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval_kitchen%2F2015%2F07%2Fndqyqy%2Fimages%2Fp80c.jpg&hash=bbc385a4fe832096fe91529391a3f78592fd57de)

தேவையானவை:

பிஞ்சு சுண்டைக்காய் - ஒரு கப் தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன்
 புளி - கொட்டைப்பாக்கு அளவு
 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - ஒரு சிட்டிகை உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடித்து தனியே வைக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி  சுண்டைக்காயை வதக்கவும். வதங்கியதும் அதனுடன் உப்பு, புளி, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, பொடித்த பொடியைச் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இது சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளவும் ஏற்றது.

பலன்கள் :

சுண்டைக்காய், குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. வயிற்றில் புழு இருந்தால் சரியாக சாப்பிட முடியாது. புண்ணும் ஏற்படும். இவற்றுக்கெல்லாம் சுண்டைக்காய்த் துவையல் கைகண்ட மருந்து.