FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: நிலா on July 20, 2015, 10:59:00 AM

Title: கேள்வியின் நாயகனே...
Post by: நிலா on July 20, 2015, 10:59:00 AM

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1168.photobucket.com%2Falbums%2Fr486%2Fswaram_nee%2Funtitled_drawing_by_mssketcher0015-d5y6whs_zpsdj2zqr4a.png&hash=31a15b59ee55bd6bddd58ffa621cbcc1617f61db) (http://s1168.photobucket.com/user/swaram_nee/media/untitled_drawing_by_mssketcher0015-d5y6whs_zpsdj2zqr4a.png.html)

பெற்றோர் எனக்கிட்ட
பெயரை விட
நாளுக்கொன்றாய் நீ
எனக்குச் சூட்டும்
செல்லப் பெயர்கள்
மட்டும் ஏனோ
அதிகம் இனிப்பாய்!

அர்த்தமின்றி அடிக்கடி
சிரிக்கும் அரட்டை
நிமிடங்கள் நமக்கு
மட்டும் ஏனோ
ஆக்ஸிஜன்  போல்
அதி அத்தியாவசியமாய்!

உன்னோடு பேசாத
வறண்ட நாட்கள்
மட்டும் ஏனோ
மிகவும் நீளமாய்!

செல்லமாய்க் கோபம்
கொள்ளும் ஊடல் காலம்
மட்டும் ஏனோ
அதிகம் பிடிக்கிறது உன்னை!

இன்னும்....
எத்தனையோ 'ஏனோ'
வினாக்கள் அறையெங்கும்
வியாபித்துக் கிடக்க...
விடை மட்டும் ஏனோ
நாம் இருவர்
நன்கறிந்த ரகசியமாய்!
Title: Re: கேள்வியின் நாயகனே...
Post by: gab on July 20, 2015, 10:43:12 PM
எதார்த்தமான, அருமையான வரிகளில் தவழும் கவிதை நயம்.  வாழ்த்துக்கள் நிலா .
Title: Re: கேள்வியின் நாயகனே...
Post by: Dong லீ on July 20, 2015, 10:47:19 PM
தெளிவான எளிமையான அர்த்தமுள்ள கவிதை .'ஏனோ' உங்கள் கவிதைகளின் விசிறியாக மாறி அடுத்தடுத்த கவிதைகளுக்கு காத்துகொண்டிருக்கிறேன்
Title: Re: கேள்வியின் நாயகனே...
Post by: பவித்ரா on July 21, 2015, 01:03:53 PM
பெற்றோர் எனக்கிட்ட
பெயரை விட
நாளுக்கொன்றாய் நீ
எனக்குச் சூட்டும்
செல்லப் பெயர்கள்
மட்டும் ஏனோ
அதிகம் இனிப்பாய்!

யதார்த்தமா அழகா எழுதி இருக்கீங்க .அருமை .தொடர்ந்து எதிர் பார்கிறேன் நிலா உங்கள் அழகான பதிப்புக்களை
Title: Re: கேள்வியின் நாயகனே...
Post by: ராம் on July 21, 2015, 10:22:58 PM
koduthu vacha aalu nila u hehe avlo sweet ah name vaikkirangale athukku :D un kavi payanam thodarattum  8)
Title: Re: கேள்வியின் நாயகனே...
Post by: JoKe GuY on August 18, 2015, 03:32:26 PM
எளிமையான நடையில் அருமையான கவிதை வாழ்த்துக்கள் நிலா
Title: Re: கேள்வியின் நாயகனே...
Post by: SweeTie on August 19, 2015, 08:20:02 AM
நிலா  உங்க கவிதை  கர்சிதமாய்  இருக்கு.  வாழ்த்துகள்