FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 19, 2015, 11:29:58 PM

Title: ~ இறால் மசாலா ~
Post by: MysteRy on July 19, 2015, 11:29:58 PM
இறால் மசாலா

(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11745365_1471806379783499_689642915052078203_n.jpg?oh=16e2611dad8fb79237d39eec11441255&oe=5615ED5D)

Ingredients

இறால் – 1/4 கிலோ
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 1 கப்
பள்ளாரி வெங்காயம் – 2
புளி – பாதி எலுமிச்சை அளவு
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – 1 கொத்து
பூண்டு – 2 பல்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

Method

Step 1

இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்த பின் அதில் மிளாகாய்பொடி, மஞ்சள் பொடி, உப்பு, கருவேப்பிலை சேர்த்து புரட்டி அதை வறட்டிக்கொள்ளவும். வறட்டும்போது காய்ந்து விடாமல் ஐந்து சதவிகிதம் தண்ணீர் இருக்கும் போதே இறக்கிவிடவும்.
Step 2

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கி வைத்த பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கிக்கொள்ளவும்.
Step 3

வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் அத்துடன் அரிந்து வைத்த தக்காளியை சேர்த்து மீண்டும் வதக்கவும்.
Step 4

தக்காளி சற்று மசிந்த உடன் பிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கிளறி விடவும். அத்துடன் புளி கரைசலை (தேவையுள்ளவர்கள் மட்டும்) ஊற்றி ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
Step 5

கொதி வந்தபின் வறட்டி வைத்த இறாலை போட்டு வேகவிடவும். தண்ணிரின் அளவு குறுகியவுடன் சிறிதளவு தேங்காய்ப்பாலை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறிவிட்டுக்கொண்டே இருத்தல் வேண்டும்.
Step 6

அடுப்பில் தீயை குறைத்து நான்கு நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும். நல்ல நிறத்தோடும், அலாதி மணத்தோடும், சுவையான இறால் மசாலா ரெடி!

இது, சாதம், சப்பாத்தி பரோட்டா ஆகியவற்றுடன் சேர்த்து உண்ண சிறந்த காம்பினேஷன்.

இந்த கிரேவியை ஒரு நாள் வைத்து மறுநாள் சாப்பிட்டால் அது நமக்கு திருநாள்தான்! சும்மா அசத்துங்க….பார்க்கலாம்.