FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 19, 2015, 09:10:44 PM
-
சுக்கு குழம்பு
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/11707362_1471808193116651_399316620229421460_n.jpg?oh=e17c547b0c3a49a2241964c9e3192a96&oe=5654A0EE&__gda__=1447849575_7017a11688059221b1f099e9240ac626)
தேவையானவை:
சுக்கு – ஒரு சிறிய துண்டு,
மிளகு – 2 டீஸ்பூன்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்,
நறுக்கிய தக்காளி – கால் கப்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கி, புளிக் கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.