FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on December 25, 2011, 05:35:00 AM
-
குழந்தை மருத்துவம்
போலியோ என்னும் சுரவாதம்
இளம்பிள்ளை வாதம் என்கின்ற போலியோவை உலகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்பதே உலக மருத்துவர்களின் ஆவல். வருடம் இருமுறை அரசு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கியும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் ஊசி போட்டும் போலியோ மறையவில்லை. காரணம் நாம் கடந்த இதழில் அகத்தியர் பாலவாகடத்தில் கூறியிருந்தது போல் தச வாயுக்களின் சீரற்ற தன்மைதான்.
குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக் கின்றன. இந்த வாயுக்கள் நிலை மாறும் போது தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த இளம்பிள்ளை வாதம் எதனால் ஏற்படுகின்றது என்பதை அகத்தியர் தெளிவாக விளக்கியுள்ளார். அவற்றை எட்டு வகையாகவும் பிரித்து கூறியுள்ளார். அதில் முதல் வாதமான சுரவாதத்தைப் பற்றி இந்த இதழில் காண்போம்.
குத்திடும் நகங்கள் எல்லாம்
கொடும் சுரம் கோபம் ஆகி சுற்றிடும
அதிரத்துள்ளே சுழன்றுபோய் வாந்தி
உண்டாகும்இத்திகை மலம்
விடாது. இருப்போடு பாதம் தன்னில்
வற்றிய வாலர் மெய்யில் வரும்
சுரவாதம் தானே (அகத்தியர் பாலவாகடம்)
பொதுவாக குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலில் பலவகையுண்டு. இதில் குழந்தையின் வயிற்றில் அஜீரணக் கோளாறு உருவாகி புளிப்புத் தன்மை ஏற்பட்டுவிடும். இதனால் உடல் அலர்ஜி ஆகி சளிபிடித்து காய்ச்சல் உருவாகும். இந்த காய்ச்சலானது 3 முதல் 8 நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும். நாளுக்கு நாள் காய்ச்சலின் வேகம் அதிகரித்து நரம்பு மண்டலங்களைத் தாக்கும். அப்போது குழந்தைகளின் ஈரல் பாதிக்கப்படும். ஈரல் பாதிப்பால் மலச்சிக்கல் உருவாகும். இந்த மலச்சிக்கலால் வயிற்றில் வாயுக்கள் சீற்றமடையும். இதனால் அருகு பற்றி வர்மம் (அருகு பற்றி வர்மம் என்பது இடுப்புப் பகுதியில் விசை நரம்பு என்ற வில்விசை நரம்பு சேரும் இடம்) பாதிக்கப்படும்.
விசை நரம்பு என்பது இடுப்புப் பகுதியில் இருந்து முதுகு வழியாக கழுத்துப் பகுதியில் கத்திரிக்கோல் மாறாக தலையின் பின்புறம் முகுளம் பகுதியில் சேரும் நரம்பாகும். ஈரல் பாதிப்பால் அருகு பற்றி வர்மம் பாதிக்கப்பட்டு விசை நரம்பு உலர்ந்து முறுகும் தன்மையடையும். இதனால் குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
முதலில் சளி உருவாகி காய்ச்சலாக மாறி மலச்சிக்கல் ஏற்பட்டு விசை நரம்பு பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதி செயலிழந்து காய்ச்சலின் தன்மை கடுமையாகும். இதை அகத்தியர் வாத தன்மை கொண்டது என்கிறார். இதற்கு சுரவாதம் எனவும் பெயரிட்டுள்ளார்.
சுரவாத காய்ச்சலுக்கான அறிகுறிகள்
·குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும்.
·மலச்சிக்கல் உருவாகும்.
·3 நாள் முதல் 8 நாள் வரை காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
காய்ச்சலின் வேகம் அதிகரிப்பதால் இடுப்புப் பகுதி செயலிழந்துவிடுகிறது. வாதத்தில் அதிகம் பாதிக்கப் படும் வாதம் சுரவாதம் என்பதால் இதனை முதலில் வைத்துள்ளனர்.
இந்த சுரவாதமானது தாயின் வயிற்றில் கரு உற்பத்தியாகும்போதும், 10 மாதம் அதாவது 300 நாட்கள் வயிற்றில் வளரும்போதும் அந்த தாய்க்கு மன அழுத்தம், மனக் கவலை, மன உளைச்சல், திடீர் அதிர்ச்சி, பயம், காமம், கோபம் போன்றவற்றால் உடலில் உள்ள தச வாயுக்கள் பாதிப்படைகின்றன. அக்டோபர் இதழில் இதைப்பற்றி தெளிவாக அறிந்திருப்பீர்கள்.
தாய்க்கு மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை இருந்தால்கூட குழந்தை பிறந்தபிறகும் இந்த சுரவாத நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இளம்பிள்ளை வாதம் என்பது உலகையே ஆட்கொள்ளும் கொடிய நோயாகும். இந்த நோயின் தன்மை பற்றி அகத்தியர் எழுதிய நூல்கள் அனைத்தும் நமக்குக் கிடைத்த பொக்கிஷம் ஆகும்.
குழந்தை தொப்புள் கொடி சுற்றி பிறப்பதும் இந்த பாதிப்பால்தான். அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுப்பதும் இத்தகைய பாதிப்பால்தான்.
அளவுக்கு அதிகமான கால்சியம், இரும்பு, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் தாயின் குடலில் புண் ஏற்பட்டு அதனால் குழந்தைக்கு பாதிப்பு எற்படுகின்றது.
ஈரத்தலையுடன் பால் கொடுப்பதால் சுரவாதம் ஏற்பட வாய்ப்பாகிறது.
பொதுவாக இந்த நோயானது கருவிலிருக்கும் போது இருக்கும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்தும்போது தாய்க்கு உடலில் நோய் தாக்கினால் அது பாலின் வழியாக குழந்தைக்கு சென்று தாக்கும்போது சுரவாதத்தின் தன்மை வெளிப்படும்.
அதிமதுரம் - 5 கிராம், நற்சீரகம் - 5 கிராம், ஜடமாஞ்சி - 5 கிராம், சாரணைவேர்- 5 கிராம், வில்வவேர் - 5 கிராம், முடக்கத்தான் - 5 கிராம், குறுந்தொட்டி - 5 கிராம் இவற்றை இடித்து சலித்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 200 மிலி ஆகும் பக்குவம் வரை காய்ச்சி பின் இளநீர் விட்டு மீண்டும் சிறிதுநேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் 1/2 டம்ளர் வீதம் அருந்தி வர வேண்டும். கசப்புத் தன்மை இருக்காது. இந்த கஷாயத்தை கர்ப்பமான நான்காவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை அருந்தி வந்தால் குழந்தைக்கு எந்தவிதமான வாத நோயும் தாக்காது.
அகத்தியர் வர்ம கண்டி, அகத்தியர் பாலவாகடம் போன்ற நூல்கள் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார்.
வரும்முன் காக்க
கருவில் குழந்தை வளரும்போது தாய்க்கு எந்தவிதமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்காகவே நம் முன்னோர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். சுற்றத்தாரும், சொந்தங்களும் அப்பெண்ணை வாழ்த்தும்போது அவள் உள்ளம் மகிழும். அப்போது குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளரும்.
மலச்சிக்கல் ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாயுவை உண்டாக்கும் பொருட்களை சாப்பிடக் கூடாது.