FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 15, 2015, 11:12:46 PM
-
மிளகாய் சட்னி
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/11108665_1470551516575652_8007472303784508182_n.jpg?oh=3edda4cadd5a8c76b8bb114c070fc97b&oe=561E6897)
மிளகாய் சட்னி தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 10
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
புளி - 1 கோலிக்குண்டு அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
மிளகாய் சட்னி செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு முதலியவற்றைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
கடைசியாக நல்லெண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றிப் பரிமாறவும்.