FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 14, 2015, 07:49:05 PM

Title: ~ ஆப்பிள் கெடாமல் இருக்க, என்ன செய்கிறார்கள் ~
Post by: MysteRy on July 14, 2015, 07:49:05 PM
ஆப்பிள் கெடாமல் இருக்க, என்ன செய்கிறார்கள்

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11750727_1469891916641612_5837825380008427104_n.jpg?oh=30021a0583a0aeedf91619cd0b9a7843&oe=56266136&__gda__=1444727710_5bf795c019969134b72602b414cf9ce3)

பளபளப்பாக இருப்பது அழகு தானே?
அதை ஏன் தவிர்க்க வேண்டும்?

உதாரணத்திற்கு ஆப்பிள் பளபளப்பாக இருப்பதற்காக இவை பண்ணைகளிலிருந்து ரசாயனத்தால் முதலில் கழுவப்படுகிறது. பின்பு, நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்கான ரசாயனம் (Preservatives) பூசப்படுகிறது. அதன் பின்னர் பளபளப்பாக இருப்பதற்காக மெழுகு (Wax) தடவப்படுகிறது.

இந்த மெழுகோடு தான் நாமும், நம் குழந்தைகளும் ஆப்பிளை வாங்கிச் சாப்பிடுகிறோம்.

நீங்கள் வாங்கும் பளபளப்பான ஆப்பிளின் மேற்புறத்தை ஒரு கத்தி கொண்டு சுரண்டுவீர்களானால் மெழுகு கைநிறையக் கிடைக்கும்.

இப்படியான உயர் தரம் என்று நாம் நம்பி வாங்குகிற பளபளப்பான பழ வகைகளைத் தவிர்க்கலாம்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிலி, நியூசீலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் ஆகிய ஆப்பிள் வகைகளை இறக்குமதி செய்கிறார்கள்.

அவை நம் நாட்டை வந்தடைய சுமார் 3 மாதங்களாவது பிடிக்கும். அவற்றின் நிறம், சுவை கெடாமல் இருக்கவும் பூச்சிகள் நுழைந்துவிடாமல் தடுக்கவும், நீர்ச்சத்து வெளியேறாமல் இருக்கவும், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும் பொருட்டும் அதன் மேல் மெழுகு தடவி இறக்குமதி செய்கிறார்கள். சாதாரண பழம் 10 நாட்களில் கெட்டுப்போகும் என்றால் மெழுகு பூசப்பட்ட பழம் 6 மாதம் வரை கெடாது.

ஆரம்ப காலங்களில் பீஸ் மெழுகு, கார்னோபா மெழுகு, ஷெல்லாக் மெழுகு ஆகிய மூன்று வகைகளை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் இதனை ஒரு ஆப்பிளின் மேல் 3 மில்லிகிராம் அளவே தெளிக்க வேண்டும். "பீஸ் மெழுகு" என்பது தேனடையில் கிடைக்கும் மெழுகு. கார்னோபா, ஷெல்லாக் ஆகியவை மரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை மெழுகுகள்.

இவற்றால் ஆபத்துக்கள் குறைவு. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் இரசாயன மெழுகையும் தண்ணீரில் கரையும் பேரா·பின் மெழுகையும் பயன்படுத்துகிறார்கள். நைட்ரேட் சேர்க்கப்படும் பழங்களில் "நைட்ரைஸோ மார்போலின்" என்னும் ஒரு இரசாயனம் உருவாகிறது. இது புற்றுநோய்க்கான முக்கிய காரணி ஆகும்.

நீங்கள் ஆப்பிளை எப்படிக் கழுவினாலும் அதிலுள்ள மெழுகு போகாது.

ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப் பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடுதான் சாப்பிட வேண்டும் என்று கூறுவர். ஏனெனில் பெக்டின் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு உதவுகிறது.

பெரும்பாலும் குழந்தைகள் ஆப்பிளை அப்படியே கடித்துச் சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கு ஆபத்தாக முடியும். மெழுகு பூசிய ஆப்பிளைச் சாப்பிடும்பொழுது அந்த மெழுகு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் படிந்துவிடும். இதனால் குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, வாயுத்தொந்தரவு, புற்றுநோய் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகம்.

வெளிப்படையாக ‘ரசாயனக் கலப்பு’ என்று தெரியும் உணவுகளைத் தவிர்ப்போம்.

பழவகைகளில் பளபளப்பாக இருப்பவற்றை தவிர்க்கலாம்.

அப்படியென்றால் எதைத் தான் சாப்பிடுவது?

நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் செரிப்பதற்கு இரைப்பை இருக்கிறது; கழிவுகளை நீக்க சிறுநீரகமும், பெருங்குடலும் இருக்கிறது. ரசாயன நச்சுக்களை சுத்திகரிக்க, ஒழுங்குபடுத்த கல்லீரல் இருக்கிறது. ஆனாலும் நம் உள்ளுறுப்புக்களை மேலும் பலவீனப்படுத்தும் வெளிப்படையான ரசாயனக் கலப்புகளை நாம் தவிர்த்து விட்டு, எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பழங்களில் பருவகால (Season) பழங்களை சாப்பிடலாம். தானியங்கள், கீரைகள் போன்றவற்றிலும் பருவகால உணவுகளைச் சாப்பிடலாம். மலிவாக நாம் கருதி தவிர்க்கும் சாதாரணப் பழங்களைச் சாப்பிடலாம். கொய்யா, வாழை, நாவல், மாம்பழம், சப்போட்டா, வெள்ளரி, தர்பூசணி... போன்ற பழவகைகள், நவதானியங்கள், பயறு வகைகள்... இன்னும் அனைத்துப் பிராந்திய உணவுகள் (அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் உணவுகள்) மிகச் சிறந்த உணவுகளாகும்.

அசைவ உணவுகளில் மீன், ஆடு போன்றவை மரபணு மாற்றப்படாத வகைகள் சாப்பிடலாம்.

கழிவின் தேக்கம் வியாதி..
கழிவின் வெளியேற்றம் குணம்..

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.