FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on December 25, 2011, 12:26:44 AM

Title: என் யாரோ அவளுக்கு
Post by: aasaiajiith on December 25, 2011, 12:26:44 AM
எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை தித்திப்பாய்
உந்தன் வாசத்தில் சுவாசத்தில் நான் கலந்தால்
என்னை எப்படி பொத்தி வைப்பாய் ?

ஏதோ ஒரு ஏற்றம் மாற்றம் என்னில் என்னில்
பூவே அது பிரதிபலிக்குதா ? உன்னில் உன்னில்
நீ உயிர் உள்ள கவிதை
படித்து  மலைத்து நின்றேன் நானே
உன் நினைவு நெஞ்சில் நின்றால்
நிஜமாய் இனிக்கவில்லை தேனே .

எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை தித்திப்பாய்
உந்தன் வாசத்தில் சுவாசத்தில் நான் கலந்தால்
என்னை எப்படி பொத்தி வைப்பாய் ?

சின்ன சின்ன பூவெல்லாம் பேசி பேசி தான் போகும்
உன்னை போல ஒன்றிற்கும் பாசம் பேச தெரியாதே
கோடி கோடி வார்த்தைகள் கூடி கூடி நின்றாலும்
உந்தன் வரியின் சூட்சுமத்தை அர்த்தம் கூற முடியாது

ஹோ ஹோ ,பூவே உன் வாய்பேச்சை
வரம்தான் என்பேனே ,கடு தவம் தான் செய்வேனே
பேசாத மௌனத்தை சாபம் என்பேனே
பெரும் சோகம் என்பேனே

பனி பூவே நீயும் வந்தால்
வசந்தம் வந்ததென்று அர்த்தம்
தனியே என்னைவிட்டு போனால்
இலையுதிர் காலம் என்று அர்த்தம்

எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை தித்திப்பாய்
உந்தன் வாசத்தில் சுவாசத்தில் நான் கலந்தால்
என்னை எப்படி பொத்தி வைப்பாய் ?

பூவே உந்தன் இதழோரம் மிளிரும் அந்த நிறம் தந்தால்
உலக காம்ரேட் எல்லோர்க்கும் கட்சி கோடியே உருவாகும்
காலை மாலை நேரத்தில் உனை தொட்டு செல்லும் காற்றைத்தான்
தூக்கிலிட்டு தூக்கிவிட்டால் என் ஆத்மாவும் சாந்தம் ஆகும்

ஹோ ஹோ , அன்பே உன் வரிகளைத்தான்
 சிறைகள் என்பேனே சுக சிறைகள் என்பேனே
உன்னை காணாத ஒன்றைத்தான்
குறைகள் என்பேனே நிறை குறைகள் என்பேனே

அடி தேவதைகள் என்று
எங்கோ வாழ்ந்ததாக கேட்டேன்
நான் கேட்ட அந்த ஒன்றை
என்று கண்களாலே காண்பேன் ?

எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை தித்திப்பாய்
உந்தன் வாசத்தில் சுவாசத்தில் நான் கலந்தால்
என்னை எப்படி பொத்தி வைப்பாய் ?
Title: Re: என் யாரோ அவளுக்கு
Post by: Global Angel on December 25, 2011, 04:32:52 AM
பாடல் வரிகளை மாற்றி தரும் கவித்திறமை நன்கு தெரிகிறது ஆசை ..... தொடரட்டும் உங்கள் கருத்தினை கவரும்  பதிவுகள்  
Title: Re: என் யாரோ அவளுக்கு
Post by: RemO on December 27, 2011, 03:59:10 AM
Nice ajith
super ah mathuringa lines elam
ana ithai vida neenga sonthama eluthura kavithaikal nalaruku (F)
Title: Re: என் யாரோ அவளுக்கு
Post by: aasaiajiith on December 27, 2011, 08:13:50 AM
விமரிசனத்திற்கு நன்றி ரெமோ ! இந்த வரிகளில் வரைந்த வரிகள் கூட முழுக்க முழுக்க என் சொந்த
வரிகள் தான்.ஏற்கனவே  ஒரு பூ வெளியோட்டமாய்  விமரிசனம் தந்தற்கே மனம் சுருங்கி இருந்தேன்
நீயும் உள்ளோட்டம் கண்டு கூறாமல் வெளியோட்டமாய்  கூறியது சுருங்கிய மனதை இன்னும்
சுருங்க செய்தது.ஒரு வேலை என் வரிகளில் தரம் குறைவோ ?? ஒன்றுமில்லா வரிகளை எல்லாம் அடிக்கோடிட்டு பாராட்டி பார்த்திருக்கின்றேன்  நீங்கள் ,என் வரிகளில் எந்த வரியையும் அடிகொடிடவில்லையே அதனால் தான் கேட்டேன் தரம் குறைவோ என்று ?

Title: Re: என் யாரோ அவளுக்கு
Post by: RemO on December 27, 2011, 03:30:55 PM
ithai padikurapa ungaludaiya varikalai vida antha paadal than ninaivukku varuthu ajith athu than kaaranam
unga varikal nallarunthaalum athai sariya kavanika mudiyala
varikal tharamaanavai thaan azhakukku arithaaram thevai ilaiye
ungal azhakaana varikalil antha paadalin mettu enum arithaaraththai neekkinaal azhaku anaivarukkum theriya varum