30 வகை பிரெட் சமையல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2011%2F06%2Fnuowez%2Fimages%2F0.jpg&hash=d8b96c0e425ba8d85a086a09f80a38c7b62f9fc8)
பிரெட்' என்றாலே, ''உடம்பு சரியில்லாதவங்க சாப்பிடறது'' என்கிற காலமெல்லாம் மலையேறி, 'பிரெட் இன்றியமையாத உணவு' என்பதாகிவிட்ட காலம் இது. வகை வகையாக ஹோட்டல்களில் கிடைக்கும் பிரெட் உணவுகளைப் பார்க்கும்போது... 'இதையெல்லாம் நாமும் செய்து பார்த்தால் என்ன?' என்று தோன்றும்தானே!
இதோ, ''ஒரு பாக்கெட் பிரெட் இருந்தால்போதும்... அட்டகாசமான ரெசிபிகளை செய்து அசத்தலாம்’' என்று சொல்லும் 'சமையல்கலை நிபுணர்', நங்கநல்லூர் பத்மா, அப்பம் முதல் அல்வா வரை 30 வகை ரெசிபிகளை பிரெட்டிலேயே தயாரித்து பிரமிக்க வைத்திருக்கிறார். அவையெல்லாம், செஃப் ரஜினியின் அலங்கரிப்பில் இங்கே அசத்தலாக இடம் பிடிக்கின்றன - நீங்கள், உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்துவதற்காக!
சமையல் டிப்ஸ்...
பிரெட் மற்றும் பாக்கிங் உணவு வகைகளில் அதிக உப்பு மறைந்திருப்பதால், இதில் சமைக்கும்போது உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
சாதம் வைத்த குக்கர் சூடாக இருக்கும்போதே, அதன் மீது இரண்டு பிரெட் துண்டுகளை வைத்தால்... நன்கு ரோஸ்டாகிவிடும்.
பொடி வகைகளை செய்யும்போது, சிறிது கல் உப்பை சேர்ப்பதால், அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.
சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது, நான்கு சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டால், பாகு இளகியே இருக்கும்.
டீ தூள் போட்டு கொதிக்க வைக்கும்போதே சர்க்கரை சேர்த்தால், சுவை குறைந்துவிடும். கடைசியாகத்தான் சேர்க்க வேண்டும்.
தக்காளி ரசம் செய்யும்போது தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்காமல், புளியுடன் சேர்த்து நன்றாகக் கரைத்து (அ) மிக்ஸியில் அரைத்து வடிகட்டி செய்யுங்கள். சூப் போல் தக்காளி ரசமும் சூப்பராக இருக்கும்.
கொழுக்கட்டை செய்ய மேல் மாவுக்கு கிளறும்போது, சரியாக வேகாமல் கட்டி தட்டிவிடும். அரிசியை ஊற வைத்து, சிறிது உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரையுங்கள். அடுப்பில் ஒரு கடாயை ஏற்றி, கரைத்த மாவை அதில் போட்டுக் கிளறி, பந்து போல் கையில் ஒட்டாமல் வந்ததும் எடுத்து, கொழுக்கட்டை செய்தால் நன்றாக வரும்.
கேரட்டைத் துருவுவதற்கு முன்பு ஐந்து நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்துத் துருவினால், ஈஸியாக துருவ முடியும்.
வெண்டைக்காயில் பொரியல் செய்யும்போது, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் உதிராக இருப்பதுடன் ருசியும் நன்றாக இருக்கும்.
கீரை மசியல் செய்யும்போது, சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும்.
சாம்பார் பொடியை மொத்தமாக அரைப்பதால், அதன் மணமும், குணமும் குறைந்துவிடும். ஒரு வாரத்துக்கு தேவைப்படும் அளவுக்கு மட்டும் அரைத்து, பாலிதீன் கவரில் போட்டு, ஒரு டப்பாவில் சேமிக்கலாம். இதனால் சாம்பார் பொடி எப்போதுமே வாசனையாக இருக்கும்.