FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 12, 2015, 01:04:17 PM
-
தேனூறும் மிளகுக் கோழி
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11223595_1469325850031552_5765972757645792421_n.jpg?oh=c9f24b0c234ea4ba0b622a8794f6c76a&oe=5627E5C4)
தேவையானவை :
எலும்பில்லா கோழி இறைச்சி – 100 கிராம்
மைதா மாவு – 25 கிராம்
சோளமாவு – 15 கிராம்
முட்டை – ஒன்று
வெள்ளை மிளகுப்பொடி – ஐந்து கிராம்
வெங்காயம் – 20 கிராம்
குடமிளகாய் – 30 கிராம்
பூண்டு – இரண்டு பல்
இஞ்சி – சிறிதளவு
தேன் – 40 மில்லி
எண்ணெய் – பொரிக்க, வதக்க
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
கோழி இறைச்சி, மைதா, சோளமாவு, முட்டை, உப்பு, மிளகுப்பொடி சேர்த்து நன்றாக கிளறவும். ரொம்பவும் கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம். இதை அப்படியே எண்ணெயில் இட்டு பொரிக்க வேண்டும்.
வெங்காயம், குடமிளகாயை சதுர துண்டுகளாகவும், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சிறிதளவு சோளமாவை தண்ணீரில் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடமிளகாயை வதக்கி, இஞ்சி, பூண்டு சேர்த்து கிளறவும்.
வதங்கி வரும் போது, சோளமாவு, உப்பு சேர்த்து கெட்டியாகும் போது, பொரித்த துண்டுகளை சேர்த்து கிளற வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கிய பின், தேனை ஊற்றலாம். தித்திக்கும் தேனில் ஊறிய மிளகுக் கோழி தயார்.