FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 12, 2015, 11:58:09 AM
-
சிக்கன் டிக்கா அல்லது (தவா சிக்கன்)
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11745778_1469327570031380_7559931744434639691_n.jpg?oh=9a7ea70125d89869ecd222a7d1c84f5f&oe=561F9F5B&__gda__=1444453107_9b28932741d3246ec4ab29cef3ce99dc)
தேவையான பொருட்கள்:
பிராய்லர் கோழி – 1 கிலோ
கோழி முட்டை – 2
எலுமிச்சை பழம்- 2
வின்கர் – 1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபுள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டேபுள் ஸ்பூன்
தயிர் – 1 கப்
வெள்ளை மிளகுதூள் – 1 டீ ஸ்பூன்
பட்டை, கிராம்பு தூள் – 10 கிராம்
உப்பு – தேவையான அளவு
சன் ஃப்ளவர் ஆயில் – 50 கிராம்
ஃபுட் கலர் – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் தோல் நீக்கப்பட்ட கோழிக்கறி துண்டுகளை கழுவி சுத்தம் செய்த பின்னர் சதை பகுதிகளை மசாலா பிடிப்பதற்காக கத்தியால் கீறிக்கொள்ளவும் அதில் ஒரு கப் வினிகர் ஊற்றி அத்துடன் எலுமிச்சைப் பழ சாற்றை பிழிந்து விடவும். இக்கலவை நன்றாக பரவும் விதம் மேலும் கீழுமாக புரட்டி எடுத்த்து அத்துடன் தயிர்,மிளகாய்த்தூள்,இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து மீண்டும் புரட்டி எடுக்கவும். அதன் பின்னர் வெள்ளை மிளகுதூள், கிராம்பு பட்டை தூள்(கரம் மசாலாவை தவிக்கவும்) ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து ரீஃபைண்ட் ஆயிலை விட்டு நன்றாக கலக்கவும். கலவை மிக கெட்டியாக இருந்தால் சற்று வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கலவையை ஒரு ப்ளாஸ்டிக் பாத்திரத்தில் நேர்த்தியாக அடுக்கிவைத்து மீதமுள்ள மசாலா கலவையை அதன் மேல் ஊற்றி சுமார் நான்கு மணிநேரம் ஃபிரிட்ஜ்ஜில் வைக்கவும். அப்படி வைக்கப்பட்ட கோழி துண்டுகளை தோசைக்கல்(தவா) அல்லது நான்ஸ்டிக் பேனில் சற்று ஆயிலை விட்டு மிதமன சூட்டில் பதமாக சுட்டு எடுக்கவும். இடுக்கியை வைத்து கோழி துண்டுகளை புரட்டி இரு புறமும் வேகும் படி செய்தல் வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட கோழி துண்டுகளை கரி அடுப்பில் வைத்து சுட்டெடுத்தால் அதுவே க்ரில் சிக்கனாகவும், தோசைக்கல்லில் வைத்து சுட்டெடுத்தால் தவா சிக்கனாக்வும் இருக்கும். பொறுமையோடு செய்தால் அருமையான சுவை கிடைக்கும். செய்து பாருங்கள்.