(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2Fftc2_zpsiov4ihh2.png&hash=d547baa358a3ff25fdcdc427a9a35bdf136d0d0e)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2Fftc5_zpsokglspfl.png&hash=704a7b134f3f29840926bc7d5280f737aa803f31)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2Fftc10_zpsn66v2vyv.png&hash=90d8430a0730ebbc3d65cf098f9e893f55a21240)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2FMaran_zpsk5vqazan.png&hash=95ed15798fa8db05d59de9136bb9ca3df1e03667)
என் சொல்லி எழுத?
நட்புகொரு இணையத்தை
தொடங்கிய நட்புகளுக்கு நன்றி
சொல்லி அவர்களின் நட்பை பற்றி எழுதவா? ....
அல்லது கனிவான கவனம் கொண்டு
மனதை புண் படுத்தாமல்
மென் படுத்தும் கண்காணிப்பாளர்களை
பற்றி மெச்சி எழதவா ?...
அல்லது இங்கு இருக்கும் எங்கள்
சிறப்பு நண்பர்களின் அழகான
நட்புறவை பற்றி எழுதவா?...
அல்லது இங்கு தினம்
தினம் பயனபடும் புதிய
புதிய பாவனையாளர்களை
பற்றி தான் எழுதவா ?....
எதை எழுத நான் எதை விட நான் ?
ஒரு நிமிடம் குழம்பி தான் போனேன் நான் !..
அவ்வளவு இருக்கிறது
நட்பின் பலம் கொண்டு
அழகான பாலமாக உருவாக்கி இருக்கிறார்கள்
நண்பர்கள் இணையத்தை ....!
எங்கோ பிறந்து வளர்ந்தாலும்
நட்புறவை வளப்பதர்க்காய்
இரு நட்புக்கள் நமக்கே நமக்காக
அமைத்து கொடுத்த அரட்டை அரங்கம்
ஆகா அருமை !..
இதன் துணையால் எனக்கு கிடைத்த
நட்புகள் ஏராளம்!!!
வாழ்க்கை புரிய வேண்டுமா
இங்கே வாருங்கள் !..
திறமைகள் வெளி கொணரும்
தொய்வில்லாத மன்றம் என்ன
நம் திறமை நிருபிக்க களம் பல இருக்கு
சில தேடல்களின் தீர்வுகள்
இங்கே காணலாம் !!!
மூடனையும் மகுடம் சூட வைக்கும்
எங்கள் இணைய பொதுமன்றம்!!! ...
புதிய புதிய பாடல்களின்
தொகுப்பை பல தரப்பட்ட
மனிதர்களின் ரசனை அறிந்து
அவர்களின் தேவையை
பூர்த்தி செய்யும் நமது
தமிழ் பாடல்களின் தொகுப்பு
பகுதி தேவையின் உச்சம்
அடடா அசத்தல் !!!...
எந்நேரமும் என்னுடன்
நண்பன் இருப்பதாய் உணர்த்தும் என்
நண்பர்களின் தொடர் வானொலி சேவை
மனதோடு மயக்க வைக்கும்
சிறப்புக்களில் ஒன்று !!!..
இவ்வளவு தனித்தன்மைகளை
எங்களுக்காக சீரும் சிறப்புமாக நட்பு
என்னும் நேசக்கரம் நீட்டி அழகாக வளரும்
எங்கள் நண்பர்கள் இணைய தளம்
5ஆம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது !!!..
மேலும் மேலும் பல பயனுள்ள சேவைகள்
துவங்கி வெற்றி நடை போட
மனதார வாழ்த்துகிறாள்
உங்கள் நண்பி!!! .....