FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on July 10, 2015, 10:36:24 PM
-
இயற்கை மூலிகை பொருட்கள்:
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11009841_1468936320070505_780108305860278538_n.jpg?oh=01d1004f80173700ed7ff1865b2067be&oe=562333FD&__gda__=1448890519_3ac26497283323076846e6a74d4720fa)
அலோபதிக் (ஆங்கில) மருத்துவத்தில் இல்லாத மருந்துகளே இல்லை. அவற்றிலும் ஒரே மாதிரியான சத்துக்கள், ரசாயனங்களை செயற்கையாக வைத்துத் தான் தயாரிக்கிறோம். ஆனால், மூலிகை, தாவர பொருட்களில் இந்த சத்துக்கள், ரசாயன தன்மைகள் இயற்கையாக கிடைக்கிறது.
“உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இயற்கை மூலிகை பொருட்கள் தான்!’ என்று அமெரிக்க மருத்துவர் கூறுகிறார்.
இஞ்சி :
மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம் தெரியும் இஞ்சியின் மகிமை.
மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூட்டை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.
கற்றாழை:
சூட்டுக்கட்டி, தீக்காயம் என்றால், உடனே டாக்டரை பார்க்க ஒடுகிறோம். அவர், “ஆயின்ட் மென்ட்’ தருவார்; “ஆன்டி பயாடிக்’ மாத்திரை தருவார். ஆனால், பல ஆண்டுக்கு முன் இதெல்லாம் இருந்ததா? அப்போ தெல்லாம் கற்றாழை சாறு தான். அதைக் காயத்தில் போட்டால், அடுத்த நாளே வடு காணாமல் போய்விடும்.
“இப்போது பலருக்கும் இதை, “ஆலுவேரா’ என்று தெரியுமே தவிர, கற்றாழை தான் அது என்று புரியாது; முகம் பளபளப்பது முதல் சரும அழகுக்கும், “ஆலு வேரா’ ஆயின்ட்மென்ட், ஜெல் என்று ஏதேதோ வந்து விட்டது. கடைகளில் அழகான பாட் டில்களில் அடைத்து தரு வதை பயன்படுத்துவதை விட, நீங்களே, கற்றாழையை வளர்க்கலாம்; தேவைப்படும்போது பயன்படுத்தலாம்!’
மஞ்சள்:
உடலில் எந்த வீக்கமாகட்டும், வயிற்று கோளாறாகட்டும் அவற்றை நீக்கும் இயற்கை தன்மை கொண்டது மஞ்சள். சாப்பாட்டில், சிற்றுண்டியில், அன்றாடம் 900 முதல் 1800 மில்லி கிராம் வரை மஞ்சளை பயன்படுத்த வேண்டும்.குங்கிலியம்: மூட்டு வலி, உடல் வலி போக்க அருமையான நிவாரணி, குங்குகிலியம் இலையின் சாறு. இஞ்சி சாறு போல, இதையும் சாப்பாட்டில் சேர்க்கலாம்; தனியாகவும் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு சாப்பாட்டிலோ, தனியாகவோ மூன்று முறை இந்த சாறை பயன்படுத்தினால், எந்த எலும்புப் பிரச்னையும் பின்னாளில் அண்டாது