FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 10, 2015, 10:12:13 PM
-
கத்தரிக்காய் தேங்காய் கூட்டு
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/11403479_1469056503391820_7417878092023450107_n.jpg?oh=781c6a133970b2531a3e1454a01a5268&oe=5616489B)
கத்தரிக்காய் - 1/4 கிலோ
தேங்காய் - 1/2 மூடி
சின்ன வெங்காயம்- 100 கிராம்
தக்காளி - 2
பூண்டு - 12 பல்
புளி - ஒரு நெல்லிகாய் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
வெந்தயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
1. தேங்காயை 1/2 அங்குல அளவிற்கு சிறிது சிறிதாக வெட்டிக்கொண்டு, வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ள வேண்டும்.இரண்டு தேக்கரண்டி அளவிற்கு தேங்காயை தனியே எடுத்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
2. பிறகு சின்ன வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. அடுத்து தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.
4. கத்தரிக்காயை நீளவாக்கில் (ஒரு அங்குல அளவிற்கு) வெட்டிக் கொள்ளவும்.
5. புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பாத்திரதை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
6. பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதங்கியதும், பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
7. தக்காளி வதங்கியதும், நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கி, பின்பு வறுத்த தேங்காயை சேர்த்து வதக்கவும்.
8. இதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
9. கொதித்ததும் புளிக் கரைசலை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
10. அடுத்து அரைத்த தேங்காய்ப் பாலை ஊற்றி குறைந்த தணலில் நன்றாக கொதிக்க விடவு
குறிப்பு
1. தேங்காய்ப் பால் சேர்க்காமலும் செய்யலாம்.
2. விருப்பப்பட்டால் தேங்காயை வெட்டுவதற்கு முன் பின்னால் இருக்கும் கருப்பு ஓட்டை சீவிக்கொள்ளவும்.