FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on July 09, 2015, 01:57:34 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fndqyqy%2Fimages%2Fp54a.jpg&hash=32c746eac7fa3e11885b25aaf4a360e0098f971c)
அரிசி உப்புமாவை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். இதனால் உப்புமா மிகுந்துவிடும். இப்படி மிகுந்துவிடும் உப்புமாவில் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போடுங்கள். தேவையான அளவு முட்டைகோஸ் மற்றும் கேரட்டை துருவிப் போடுங்கள். எல்லாவற்றையும் கலந்து நன்றாகப் பிசைந்து சிறுசிறு வடைகளாகத் தட்டி, சமையல் எண்ணெயைக் காயவைத்து முறுகலாகப் பொரித்து எடுங்கள். மிகவும் ருசியான இந்த வெஜிடபிள் வடை, நிமிடங்களில் காலியாகிவிடும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fndqyqy%2Fimages%2Fp54b.jpg&hash=35f1ca340de1c0802b94e0ae1f2307bb740007f3)
முருங்கைக்கீரை, அகத்திக்கீரையை வதக்கும்போது கரண்டியின் காம்புப் பகுதியை வைத்துக் கிளறவும். அப்படிக் கிளறினால், கட்டி விழாமல் கீரை உதிரி உதிரியாக இருக்கும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fndqyqy%2Fimages%2Fp58a.jpg&hash=3f9341297b5b64631dffa60534bc3ec0bdd37dea)
மோர்க்குழம்பு செய்யும்போது, பொங்கிப் பொங்கி வழிகிறதா? ஓர் உருளைக்கிழங்கை எடுத்து, தோல் சீவி, துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளுங்கள். மோர்க்குழம்பு பொங்கி வரும்போது, இந்தத் துண்டுகளைப் போட்டால், பொங்குவது நின்றுவிடும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fndqyqy%2Fimages%2Fp58b.jpg&hash=781209cf8d2fb080eb2beaad0fde658525ff44ac)
பழுத்த நாட்டு வாழைப்பழத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்துப் பிசைந்து, முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி வர... முகம் பளபளக்கும். நல்ல நிறம்... மாசு, மரு இல்லாத பொலிவைக் கொடுக்கும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fndqyqy%2Fimages%2Fp58c.jpg&hash=f473b6bbeb91cce7874672ffe03554cddf7e52ad)
உருளைக்கிழங்கை வேகவைத்த பின்பு உரித்தெடுக்கும் தோலை தூக்கி எறிந்துவிடாதீர்கள். அதைக் கொண்டு வெள்ளித்தட்டு, விளக்கு போன்றவற்றைத் தேய்த்தால் பளிச்சென்று மின்னும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fndqyqy%2Fimages%2Fp58d.jpg&hash=18b99cd719da328cf78182a8b60dc0e70e2cb243)
வெண்ணெயை நெய்யாக உருக்கும் போது, ஒரு துளி உப்பு சேர்க்கவும். நெய் சாஃப்ட்டாக இருக்கும். துகள், துகளாக வரும். நல்ல வாசனைக்கு கொஞ்சம் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்க்கலாம்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fndqyqy%2Fimages%2Fp58e.jpg&hash=1285a7e410cede326e4ab0c24eb2ad20139a3f4d)
இதயத்துக்கு இதமான செம்பருத்தி!
செம்பருத்தி... இது செம்பரத்தை, செவ்வரத்தை என்ற வேறு பெயர்களைக்கொண்டது. செம்பருத்தியின் பூவுக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. குறிப்பாக, இதயநோய்க்கு செம்பருத்திப்பூ அருமையான மருந்தாகும். காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப்பூவின் இதழ்களைச் சாப்பிட்டு வந்தால், காலப்போக்கில் இதயநோய் குணமாகும். மேலும், இதயநோயாளிகளுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளையும் இந்த செம்பருத்திப்பூ சரிசெய்யக்கூடியது.
மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் செம்பருத்திப் பூக்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பிரச்னைகள் தீருவதோடு கர்ப்பப்பை குறைபாடுகள் சரியாகும். செம்பருத்திப்பூக்களை தலைக்குத் தேய்க்கும் சிகைக்காய் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், பொடுகு, முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்னைகள் சரியாகும். காயவைத்த செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, பயத்தம்பருப்பு, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக்கி, சோப்புக்குப் பதிலாக தலை முதல் கால் வரை பூசி குளித்து வர, தோல் நோய்களில் இருந்து விடுபடலாம்!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fndqyqy%2Fimages%2Fp72a.jpg&hash=93701d7538e2eb3c24da815c081d0f3ad0785ab3)
சிறிது புளியைக் கரைத்து அந்தத் தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையில் காய்கறி, பழங்களை 15 நிமிடம் ஊறவைத்துக் கழுவினால்... காய்கறி, பழங்களில் உள்ள ரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் தன்மை நீங்கிவிடும். பாகற்காய் போன்ற திக்கான தோல் உள்ள காய்களை இரண்டு முறை கழுவ வேண்டும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fndqyqy%2Fimages%2Fp72b.jpg&hash=f46115c8b5070b1e3f5ec911437bdc6b003344d0)
வறுத்த தேங்காய்த் துருவல் ஒரு கப், ஏலக்காய் ஐந்து இவற்றை மிக்ஸியில் தூளாக்கி, அத்துடன் வறுத்த சேமியாவை பொடியாக நொறுக்கிப் போட்டு, வறுத்த முந்திரித் துண்டுகளையும் சேர்த்து ஒரு டப்பாவில் கலந்து வைத்துக்கொள்ளவும். திடீரென விருந்தாளி அல்லது விசேஷம் என்றால், இக்கலவையில் ஒரு கரண்டி எடுத்துப் போட்டு வெந்நீர் விட்டு, சூடான பாலும், ஒரு தேக்கரண்டி நெய்யும் விட்டுக் கலந்தால் இன்ஸ்டன்ட் பாயசம் ரெடி.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fndqyqy%2Fimages%2Fp82d.jpg&hash=f790d92cc58f4d2099a2caba42abba108ca5f165)
வடகத்தில் பூச்சி வராமல் நீண்ட நாள் இருக்க, அதனுடன் மிளகாய் வற்றலையும் கொஞ்சம் போட்டு வைத்தால் போதும்; மிளகாயின் காரத்தினால் பூச்சி அண்டாது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fndqyqy%2Fimages%2Fp82e.jpg&hash=acf7d66ae26b6b46cc4cb68df4ecbdd840f7c973)
பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா? வசம்பைத் தட்டி, தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு அந்த எண்ணெயைத் தடவி வரலாம். வில்வக்காயைப் பொடியாக்கி அதில் சம அளவு சிகைக்காய்த்தூள் கலந்து தலைக்குக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fndqyqy%2Fimages%2Fp94a.jpg&hash=2c27481c85fde50ebbb8ae722fc334016633e398)
கறிவேப்பிலை... இது நம் வீடுகளில் சமையலில் கட்டாயம் இடம்பிடிக்கும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி-1, பி-2, சி சத்துக்கள் மட்டுமில்லாமல் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. கறிவேப்பிலையை துவையலாக்கி சாப்பிடுவதால் பற்கள் உறுதிபெறுவதோடு எலும்பும் பலமாகும். மேலும் கண், பல் சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கக்கூடியது. குறிப்பாக, காய்ச்சலை விரட்டுவதில் கறிவேப்பிலை முக்கிய பங்காற்றுகிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சிறிதளவு சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சிச்சாறு மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்து வெந்நீர் அருந்த வேண்டும். இப்படி காலை, மாலை 3 நாள் சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான காய்ச்சலும் குணமாகும். பித்தம் அதிகமாகி சில கோளாறுகளை ஏற்படுத்தும்போது, கறிவேப்பிலையை துவையலாக அரைத்து எலுமிச்சைச் சாறு சேர்த்து, சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மூலநோயால் அவதிப்படுகிறவர்கள் கறிவேப்பிலையுடன் வெந்தயம், மிளகு சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து உப்பு சேர்த்து காலை, மதியம், இரவு என 3 வேளை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் முழு பலன் கிடைக்கும்.