FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 08, 2015, 08:09:28 PM
-
தக்காளி பிரியாணி
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11403143_1468370520127085_9161182496087609863_n.jpg?oh=6efe40f153108eed927e9cc77706ad3e&oe=5628AE35)
பாசுமதி அரிசி - 2 கப்,
தக்காளிக்காய், தக்காளிப்பழம், பச்சை மிளகாய் - தலா 2 (நறுக்கவும்),
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
பெரிய வெங்காயம் - ஒன்று,
பிரெட் ஸ்லைஸ் - 2,
முந்திரித் துண்டுகள் - 4,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித் தழை - 3 டேபிள்ஸ்பூன்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படி செய்வது?
வெந்நீரில் தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு, அரிசியைக் களைந்து சேர்த்து தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். பிரெட் ஸ்லைஸ்களை துண்டுகளாக்கி வறுக்கவும். குக்கரில் ஆவி வெளியேறியதும், சாதத்துடன் முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும். மல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர்ப்பச்சடி ஏற்றது.