FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 08, 2015, 08:07:04 PM

Title: ~ படித்ததில் பிடித்தது !! உங்களுக்காக........ ~
Post by: MysteRy on July 08, 2015, 08:07:04 PM
படித்ததில் பிடித்தது !! உங்களுக்காக........

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11692678_1468374390126698_3219775076486332276_n.jpg?oh=98b4e9a970db69f979c5d9e3786674e0&oe=5611342A)

1. பனடோல், பரிசித்தமோல் மற்றும் வலி நிவாரணிகளை வைத்தியரின் ஆலோசனை இன்றி எடுப்பப்தைத் தவிர்க்கவும்.

2. வைத்தியரின் ஆலோசனை இன்றி எந்த ஒரு மருந்து வகையையும் உட்கொள்ளுவதைத் தவிர்கவும்.

3. வீட்டில் மருந்து வகைகள் மற்றும் இரசாயனப் பொருட்களை சிறு பிள்ளைகளின் கைகளுக்கு எட்டுமிடத்தில் வைப்பதைத் தவிர்க்கவும்.

4. பாம்புக்கடி போன்ற விசக்கடி ஏற்படின் அவ்விடத்தருகில் இறுக்கக் கட்டுவதைத் தவிர்க்கவும்.இவ்வாறு செய்வதால் குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப் பட்டு அவ் அங்கம் செயலிழந்து விட சாத்தியமுண்டு.

5. இரத்தக் காயம் ஏற்படின் இயன்றளவு காயம் ஏற்பட்ட அங்கத்தை இதய மட்டத்தின் மேல் வைத்துக் கொள்ளவும். இதனால் இரத்தப் போக்கின் அளவைக் குறைக்க இயலும்.

6. பொதுவாக உடலில் இருந்து 1.2 லீட்டர் குருதி வெளியேரின், நோயாளி மயக்க நிலையை அடைவார். 2 லீட்டர் குருதி வெளியேரின் மரணம் ஏற்பட சாத்தியக்கூறுண்டு,

7. குருதி வெளியேறுவதைத் தவிர்க்க கோப்பித் தூள் போன்றவற்றை இடுவதைத் தவிர்க்கவும். அத்துடன் குருதிக் காயத்திற்கு பஞ்சு வைத்துக் கட்டுவதையும் தவிர்க்கவும்.

8. முதலுதவி செய்பவர் எப்பொழுதும் நோயாளியின் குருதி தனதுடலில் படுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், குருதி ஒரு அபாயகரமான நோய்க்காவி ஆகும்.

9. புகைப்பிடிக்கையில் உடலில் நிக்கொற்றின் எனும் இரசாயனப் பதார்த்தம் சேர்வதால் உடலில் ஒரு வித ஓமோன் சுரக்கும். இது இதயத்துடிப்பை அதிகரிக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கும்.

10. குருதி காயம் ஏற்படின் Nacl கொண்டு சுத்தப் படுத்தவும். NaCl ஒரு சிறந்த கிருமி நீக்கி ஆகும். NaCl சேலைனாக எடுக்கலாம். அல்லது உப்பு நீரைக் பாவிக்கலாம்.

11. எரி காயம் ஏற்படின் உடனடியாக ஓடும் நீரில் கழுவவும். கொப்பளம் ஏற்படின் அதனை ஊசி கொண்டு உடைத்தல் ஆகாது.