FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 08, 2015, 08:04:23 PM

Title: ~ சைவக் கேக் (Vegetarian Cake) ~
Post by: MysteRy on July 08, 2015, 08:04:23 PM
சைவக் கேக் (Vegetarian Cake)

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/11692655_1468375396793264_3174382467233009046_n.jpg?oh=dea3c9b0cffb0e9c1dc2c03ec3d8ae00&oe=56170A46&__gda__=1445707981_3a23c630317f28d799fa374a8d428e11)

தேவையான பொருட்கள்

சீனி 250g
மா 250g
மாஜரின் 250g
ரின் பால் (Condensed Milk) 395g
வறுத்த ரவை 4 மே.க
பேக்கிங் பவுடர் 1 மே.க.
தண்ணீர் 300ml ,Cashew Nuts 50g
பிளம்ஸ் 50g வனிலா 1 மே.க

செய்முறை

1.ஒரு பாத்திரத்தில் மாஜரின், சீனி, ரின் பால், மூன்றையும் கலந்து சீனி கரையும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
2.முதலில் மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து 3 முறை அரிதட்டினால் அரித்துக் கொள்ளவும்.
3.பின்னர் மாவையும் சேர்த்து, முந்திரி பருப்பு, பிளம்ஸ், வறுத்த ரவை, வனிலா, தண்ணீர் ஆகியவற்றையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
4.கேக் தட்டிற்கு எண்ணைக் கடதாசி போட்டு கேக் கலவையை ஊற்றி 180°C யில் 35 நிமிடம் பேக் செய்து கொள்ளவும்.
5.ஆறியபின் துண்டு துண்டாக வெட்டி பரிமாறவும்

சுவையான முட்டை இல்லாத சைவக்கேக் தயார்