FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 07, 2015, 09:28:18 PM

Title: ~ குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்க என்ன செய்யலாம் ~
Post by: MysteRy on July 07, 2015, 09:28:18 PM
குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்க என்ன செய்யலாம்

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11694988_1468363926794411_708849686737866323_n.jpg?oh=4bab1c6e104441fb471a4a96df795274&oe=561AD985)

காய்கறிகளில் பைட்டோநியூட்ரியன்ட்ஸ் (Phytonutrients) சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, இதய நோய்கள், சர்க்கரை நோய், ஸ்ட்ரோக், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை வராமல் இருக்க உதவுகின்றன.

அன்றாடம் உணவில் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடுபவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு விதமான சத்து இருக்கிறது. எனவே, ஒரே காய்கறியைத் தொடர்ந்து சாப்பிடாமல், அனைத்துக் காய்கறிகளையும் சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும்.

• காய்கறி மார்க்கெட்டுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு காயை எடுக்கும்போதும், அதன் சத்துக்களையும் பலன்களையும் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இதனால், வாங்க ஆர்வமாக உதவுவதுடன், விரும்பிச் சாப்பிடவும் செய்வார்கள்.

• குழந்தைகளுக்குக் காய்கறிகளின் முக்கியத்துவத்தைச் சொல்லித்தர, பெற்றோர்கள் தங்களது உணவின் பெரும்பகுதியில் காய்கறி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

• காய்கறிகளைச் சுத்தப்படுத்துவது, நறுக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொடுங்கள். படிக்கும் குழந்தையைச் சமைக்கச் சொல்வதா என எண்ண வேண்டாம். சமையலில் ஈடுபடும் குழந்தைகள், உடலுக்குக் கேடு விளைவிக்கும் துரித உணவுகள் பக்கம் திரும்ப மாட்டார்கள்.

• குழந்தைகளுக்குக் காய்கறிகளை மட்டும் தனியாகச் சாப்பிடக் கொடுக்கவும். காய்கறிகளை உணவுடன் கலந்துவிட வேண்டாம். காய்கறிகளை ஒரு தட்டில் வைத்து, அலங்கரித்துக் கொடுங்கள். எலுமிச்சை, கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி போன்றவற்றால் உணவை அலங்காரம் செய்துகொடுத்தால், காய்கறிகளை குழந்தைகளுக்கு எளிதில் பிடித்துவிடும்.