FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2015, 08:55:04 PM

Title: ~ மட்டன் எலும்பு சூப் ~
Post by: MysteRy on July 07, 2015, 08:55:04 PM
மட்டன் எலும்பு சூப்

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/1908118_1468364720127665_1232087272526575215_n.jpg?oh=9648c610ed37eccec581a9f983d23371&oe=560EDCCF)

தேவையான பொருட்கள் :

எலும்பில் வேக வைக்க வேண்டியது :

கறி உடைய மார்கண்டம் எலும்பு - ஆறு துண்டு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தனியாதூள் - ஒரு மேசை கரண்டி
தேங்காய் பால் - கால் டம்ளர்

தாளிக்க :

நல்லெண்ணை - 2 தேக்கரண்டி
கரம் மாசாலா தூல் - கால் தேக்கரண்டி
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - கொஞ்சம்

செய்முறை :

• வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• எலும்பை கழுவி சுத்தம் செய்து முன்று கப் தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகு தூள், தனியாதூள், சேர்த்து வேகவைக்கவும்.

• வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.

• நல்லெண்ணையில் தளிக்க வேண்டியவைகளை போடு தாளித்து சூப்பில் கலக்கவும்.

• சத்தான மட்டன் எலும்பு சூப் ரெடி.

• குறிப்பு: இந்த சூப்பை ஒரு நாள் கறி எலும்பிலும், ஒரு நாள் சிக்கன் எலும்பிலும் செய்து குடிக்கவும். ஹிமோகுளோபின் கம்மியாக உள்ளவர்கள் ஆட்டு ஈரலில் சூப் செய்து சாப்பிட்டால் உடனே சரியாகும்