FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2015, 08:43:15 PM
-
கீரை மசியல்
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/11403410_1468370076793796_5222691426506000040_n.jpg?oh=18a5692f17e84b2c1412b15b16b7bd14&oe=565C656B)
அரைக் கீரை - 1 கட்டு (விருப்பமான கீரை வகையில் ஏதேனும்),
கத்தரிக்காய் - 4,
கேரட் - 1,
சிறிய சைஸ் பீர்க்கங்காய் - 1 அல்லது புடலங்காய் - 1 அல்லது சௌ சௌ - 1/2,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 10,
தக்காளி - 3,
புளி - பாதி எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிது,
நார்த்தங்காய் ஊறுகாய் - 1 துண்டு
தாளிக்க...
கொத்தமல்லி விதை - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2.
எப்படிச் செய்வது?
கீரையை தட்டி பூச்சி, புழு இல்லாமல் பார்த்து தூசி அகற்றவும். மண் போக நன்றாகத் தண்ணீரில் கழுவவும். தண்ணீரைப் பிழிந்து கீரையை இரண்டிரண்டாக நறுக்கி குக்கரில் எடுத்துக் கொள்ளவும். காய்களை தோலெடுத்து நறுக்கி, நார்த்தங்காய் ஊறுகாய் தவிர மற்ற அனைத்தையும் சேர்க்கவும். குக்கரில் தண்ணீர் சிறிது விட்டு ஒரு விசில் வரும் போது நிறுத்தவும். தண்ணீர் அதிகம் விடக்கூடாது. நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்து, தண்ணீர் வற்றியதும் ஆற வைக்கவும். கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாயை லேசாக வதக்கி கீரையுடன் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். சத்தான மணக்கும் கீரை மசியல் தயார். மிக்ஸியில் அரைக்காமல் தயிர் மத்தால் கடைந்தால் நன்றாக இருக்கும்