FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 05, 2015, 09:01:26 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F07%2Fywqmdd%2Fimages%2Fp102g%25281%2529.jpg&hash=9891ac58451bda14d69d41b4318291255e7ea648)
சன்னா கட்லெட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F07%2Fywqmdd%2Fimages%2Fp102h.jpg&hash=3751ad178b9d61b4e50737ffed674aac22c38473)
தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), ஆச்சி சன்னா மசாலா - 3 டீஸ்பூன், ஆச்சி கரம் மசாலா - அரை டீஸ்பூன், ஆச்சி தனி மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, ஆச்சி மஞ்சள்தூள் - சிறிதளவு, உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கவும்), பிரெட் தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெள்ளைக் கொண்டைக்கடலையை 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு மசித்துக்கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை வதக்கி... ஆச்சி சன்னா மசாலா, ஆச்சி கரம் மசாலா, ஆச்சி மஞ்சள்தூள், ஆச்சி தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். இதை மசித்த உருளைக்கிழங்கு - சன்னாவோடு சேர்த்து நன்றாகப் பிசைந்து கட்லெட் வடிவில் தட்டி, பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கி, செய்துவைத்த கட்லெட்டுகளைப் போட்டு போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் நன்றாக சிவக்கவிட்டு எடுக்கவும்.