FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 04, 2015, 11:43:51 PM

Title: ~ கார வடை ~
Post by: MysteRy on July 04, 2015, 11:43:51 PM
கார வடை

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11707600_1467538473543623_1282314880805920127_n.jpg?oh=f321596e7114d47769c4d8d89144ab90&oe=5627E366)

கெட்டியாக அரைத்த இட்லி மாவு - 200 கிராம்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 அல்லது சிறிய வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது),
மிளகு - 5,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
தனிவத்தல் பொடி - 1/4 டீஸ்பூன்,
தேங்காய் - 1/4 மூடி (பொடியாக நறுக்கியது),
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிது
எப்படிச் செய்வது?

இட்லிக்கு அரைக்கும் நாளில் மட்டுமே செய்யப்படும் வடை இது. இட்லிக்கு அரைக்கும் நாளில் அரிசி, உளுந்தம் பருப்பு மாவை கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்ததும், அதில் மூன்று கை ஒரு கிண்ணத்தில் தனியே எடுத்துக் கொள்ளவும். அதில் கடலைப் பருப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்தெடுத்ததும் புளிக்கும் முன்பு உபயோகிக்க வேண்டும். எண்ணெய் தவிர, மேலே குறிப்பிட்ட அனைத்தையும் மாவில் கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், சிறிய உருண்டைகளாகப் போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறவும். சுவையான கார வடை தயார். குழந்தைகள் இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள்