FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 03, 2015, 07:49:54 PM
-
முருங்கைகாய் சாதம்
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11698714_1467000176930786_4951455053943125900_n.jpg?oh=6262f75e8e47411adfbff7c8812ecc1a&oe=562CE716)
தேவையான பொருட்கள்
சாதம் - 1 கப்
முருங்கைக்காய் - 5
நல்லெண்ணெய் - 25 மி.லி.
மிளகாய் வற்றல் - 2
எலுமிச்சை பழம் - பாதி
மஞ்சள் பொடி - சிட்டிகை
பெருங்காயப்பொடி, தனிவத்தல் பொடி, கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை
• எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து தனியாக வைக்கவும்.
• முருங்கைக்காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கி நன்றாகக் கழுவிய பின், தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்தவுடன் தோல் விலக்கி, அதன் சதைப்பாகத்தை ஒரு ஸ்பூனினால் வழித்து எடுத்து வைக்கவும்.
• அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், காரத்துக்குத் தேவையான தனிவத்தல்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
• கடாயில் தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
• மஞ்சள், வத்தல்பொடி, உப்பு சேர்த்து கலந்து வைத்த கலவையை வாணலியில் இடவும்.
• நன்றாக வதக்கி எண்ணெய் கக்கும்போது தேவையான அளவு எலுமிச்சைச்சாறு கலக்கவும். ஒரு கிண்ணத்தில் முருங்கைக்காய் ஊறுகாயை எடுத்து வைக்கவும்.
• அதே வாணலியில் சிறிது ஊறுகாயோடு கொஞ்சம் சாதம் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான முருங்கைகாய் சாதம் ரெடி