FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 03, 2015, 07:44:35 PM
-
ஸ்டஃப்டு பாலக் சப்பாத்தி
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11692557_1467000310264106_635006575430607025_n.jpg?oh=a397dada3044c5f97a6fea122ce3ca57&oe=56340613&__gda__=1444575304_e3d4e470d788f18fddc526b621f588f7)
தேவையான பொருட்கள்
பசலை கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய்
செய்முறை
• வெங்காயம், ப.மிளகாய், கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கீரையை போட்டு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி ஆறவைக்கவும்.
• பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஆற வைத்த கீரை அனைத்தையும் சேர்த்து, சப்பாத்தி மாவில் இட்டு ஸ்டஃப்டு கீரைச் சப்பாத்தி செய்யலாம்.
• சப்பாத்தி மாவு பிசையும் போது, தனியே இவை அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.
• சுவையான ஸ்டஃப்டு பாலக் சப்பாத்தி ரெடி