பல்ப்பி சாத்துக்குடி ஜூஸ்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F07%2Fmqytji%2Fimages%2Fp66b.jpg&hash=6ab9d6ed1e40798f1663da97a0f9f807842e4650)
தேவையானவை:
தோல், விதை நீக்கிய சாத்துக்குடி - 2,தண்ணீர், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை:
சாத்துக்குடி சுளைகளைப் பிரித்து, தோல், விதை நீக்கி, மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு, ஒரு சுற்று சுற்றி, வடிகட்டாமல் அப்படியே அருந்தலாம்.தேவைப்பட்டால், ஐஸ்கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F07%2Fmqytji%2Fimages%2Fp66a.jpg&hash=3824575a8b3868c5762f66b55cb15adcc0755785)
பலன்கள்:
வைட்டமின் சி இதில் அதிகம். சர்க்கரை சேர்க்காத சாத்துக்குடி ஜூஸ் என்பதால், சர்க்கரை நோயாளிகளும் அளவோடு அருந்தலாம். கார்போஹைட்ரேட் இதில் இருப்பதால், எளிதில் செரிமானமாகும். கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை சிறிதளவு இருக்கின்றன. தசைகளின் சீரான வளர்ச்சிக்கும், இதயம் சீராக இயங்கவும், உடலில் அமிலத்தன்மையைக் கட்டுக்குள்வைக்கவும் உதவும். பொட்டாசியம் இதில் அதிக அளவு இருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இந்த ஜூஸை அடிக்கடி கொடுக்கலாம்.
உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள், இந்த ஜூஸில் சர்க்கரை சேர்த்தும் பருகலாம். ஒரு நாளைய வைட்டமின் சி தேவையை, ஒரு சாத்துக்குடிப் பழத்தின் மூலம் பெறலாம். எனவே, ஒரு சாத்துக்குடியை முழுமையாக சாறு எடுத்து, 200 மி.லி அளவுக்கு ஓர் உணவுக்கும் மற்றோர் உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அருந்தலாம். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்பவர்கள், தங்களது பயிற்சிகளை முடித்தவுடன், அரை மணி நேரம் கழித்து இந்த ஜூஸைப் பருகலாம். சருமம் பொலிவு பெறும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரை இன்றி, இந்த ஜூஸை அருந்தக் கூடாது. டைபாய்டு காய்ச்சல் இருப்பவர்கள், அல்சர் போன்ற வயிற்றுப் பிரச்னை உள்ளவர்களும் சாத்துக்குடி ஜூஸ் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் பருகுவதைத் தவிர்க்கவும்.