FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 01, 2015, 02:45:40 PM
-
காதல் சின்னமாம்
தாஜ் மகாலினில்
பதிந்து பொதிந்திருக்கும்
கற்களாய் இருந்திட வேண்டாமெனக்கு ....
ஆங்கே
எழில் யமுனை
நதிக்கரையினில் பச்சை பசேலென
அடர்ந்து படர்ந்திருக்கும்
புற்க்களாய் இருந்திட வேண்டாமெனக்கு .....
தொன்றுதொட்டு அன்று முதல்
தேசிய விருது வென்ற இன்றுவரை
வெளிவந்த அதி சிறந்த வரிகளுக்கான
சொற்களாய் இருந்திட வேண்டாமெனக்கு .
அதிகாலை துவங்கி அரக்கப்பரக்க புரியும்
அலுவல்களுக்கு இடையிடையே
அங்குமிங்குமென பறக்காதிருக்க
அத்தனை கூந்தலையும்
அள்ளிமுடித்து கவ்விக்கடித்து
அலுங்காமல் பார்த்துக்கொள்ளும்
உன் கூந்தலினிடை "கிராபி " யின்
பற்களாய் இருந்து கிடந்து போகின்றேனே !!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs22.postimg.org%2Fp724ymha5%2FCRABY.jpg&hash=dc464eb245e5163d83bc6cf7c1ffc363574545f4) (http://postimg.org/image/p724ymha5/)