FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 29, 2015, 10:58:42 PM
-
தேங்காய் துருவல் இடியாப்பம்
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/11667307_1465928327037971_784790759387006285_n.jpg?oh=7b2d82955213540a4a513a14a0fad3c7&oe=562B44C9&__gda__=1445451121_cfdf98908186fa7fd9343c33216371b1)
தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் (10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்), பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, இடியாப்பத்துடன் கலந்து, வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிகறிவேப்பிலை சேர்க்கவும்.
குறிப்பு: முந்திரி, பொட்டுக்கடலை சேர்த்தும் இதை தயாரிக்கலாம்