FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 27, 2015, 09:39:31 PM

Title: ~ காரக்குழம்பு ~
Post by: MysteRy on June 27, 2015, 09:39:31 PM
காரக்குழம்பு 

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/11163855_1465193187111485_2393781993114884981_n.jpg?oh=df8ccf4042b0702dba47c4ee2e13aac1&oe=562C2D3A&__gda__=1445132650_e6442e601c02a887223280137c8d85e7)

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
தக்காளி-1
பூண்டு-5 பற்கள்
மிளகு-8
புளிக்கரைசல்-1/2கப்
சாம்பார்பொடி-1டீஸ்பூன்
வெந்தயப்பொடி-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
வரமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
நல்லெண்ணெய்
உப்பு
சர்க்கரை(அ) வெல்லம் - சிறிது

செய்முறை

1.வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகு இவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
2.புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.
3.புளிக்கரைசலுடன் அரைத்த கலவையைச் சேர்க்கவும். சாம்பார்பொடி, வெந்தயப்பொடி மற்றும் தேவையான உப்புச் சேர்த்து கரைத்துவைக்கவும்.
4.கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை(கைவசம் இல்லை, அதனால் சேர்க்கலை!), வரமிளகாய் தாளிக்கவும்.
5. குழம்புக்கலவையை ஊற்றி தேவையான அளவு நீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
6.குழம்பு நன்றாக கொதித்ததும் அடுப்பை குறைவாக வைக்கவும்.
7.தேவையான பக்குவத்துக்கு குழம்பு சுண்டி, எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
8.சுவையான குழம்பு தயார்...
9.பரிமாறும் கிண்ணத்துக்கு மாற்றி பரிமாறவும்....ஹிஹி...படத்தில நம்பர் போட்டாச்சு...எதுக்குன்னு யோசிப்பீங்களேன்னு 9வது ஸ்டெப்பும் எழுதிட்டேன். wink emoticon smile emoticon
நாங்கள் கீன்வா-பிரவுன் ரைஸ் தோசையுடன் சாப்பிட்டோம். இந்தக் குழம்பு இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக ரொம்ப நன்றாக இருக்கிறது. சாதத்துடனும் சாப்பிடலாம். நன்றாக இருக்கும். சப்பாத்தியும் இதற்கு துணை போகும் என்றே தோன்றுகிறது. செய்து சுவைத்துப்பார்த்துச் சொல்லுங்க. நன்றி!