FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 27, 2015, 09:34:45 PM
-
தேங்காய் சிக்கன் குழம்பு
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/11209576_1465211113776359_8429058897632383592_n.jpg?oh=d59a1b49340b861acddf0af3808d8bc4&oe=55EE9034)
தேவையான பொருட்கள்
சிக்கன்- 1 கிலோ(உப்பு மிளகாய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.)
பெரிய வெங்காயம்-5 நறுக்கியது
தக்காளி-2 நறுக்கியது
உப்பு தேவையான அளவு
அரைக்க :
மிளகு-1டீஸ்பூன்
பெருஞ்சீரகம் விதைகள்-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்-5-6
காய்ந்த தேங்காய்-1/4 கப்
இஞ்சி- சிறிதளவு
பூண்டு-7
செய்முறை
கடாயில் மல்லி விதை, மிளகு, சிவப்பு மிளகாய், சீரகம், பெருஞ்சீரகம், ஆகியவற்றை சேர்த்து வறுத்து தனிவே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து துருவி வைத்துள்ள தேங்காயை கடாயில் போட்டு வறுத்துக்கொள்ளவும். பின்னர் வறுத்து வைத்த பொருட்களுடன் பூண்டு, இஞ்சி சேர்த்து மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பொன்னிறமாக வதக்கியதுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதனுடன் கலந்து கிளறி விடவும்.
பின்னர் சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மிளகாய்தூள் சேர்த்து பிசைந்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அதில் போட்டு பத்து நிமிடங்களுக்கு கிளறிவிடவும். கிளறியதும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கறிவேப்பிலை போட்டு சிக்கனை மூடி வைத்து வேகவிடவும். சிக்கன் வெந்ததும் இறக்கி பறிமாறலாம்.