FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 27, 2015, 09:20:13 PM

Title: ~ உடம்பை குறைக்கும் தேங்காய்.. ~
Post by: MysteRy on June 27, 2015, 09:20:13 PM
உடம்பை குறைக்கும் தேங்காய்..

(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/11107169_1465557507075053_3182310513141816782_n.jpg?oh=77dc4ae7e37bfd99759c83bc6fe6a6f5&oe=56332008)

சமையலில் சுவையூட்டியாக தேங்காயின் பயன்பாடு உள்ளது. மேலும் தேங்காயை அப்படியே சாப்பிட்டால் பசி அடங்கும். இனிப்பு, நொறுக்குத் தீனி, சுண்டல், சாலட் எனப் பல்வேறு உணவு வகைகளில் தேங்காய் துருவல் சேர்க்கப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்கள் என்றால் இட்லிக்கு தேங்காய் சட்னியும், ஆப்பம், இடியாப்பத்துக்கு தேங்காய் பால்தான் சரியான காம்பினேஷன் என்று அடித்து சொல்வார்கள். அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால், நண்டு மற்றும் வாளை மீனில் தேங்காயை அரைத்து ஊற்றி சாப்பிடுவதே அலாதி ருசி என்பார்கள். தேங்காய், மாங்காய் சேர்த்த சுண்டலை, சிறுவர் முதல் பெரியவர் வரை ருசித்து சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள். கூந்தல், சருமப் பராமரிப்பில் தேங்காய் எண்ணெயின் முக்கியத்துவத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தேங்காய் தென்னிந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவில் தேங்காய் இல்லாத சமையலே இல்லை எனலாம். தேங்காயின் பயன்பாடு அளப்பரியது. தேங்காயை சமையலில் பயன்படுத்தலாம். அதில் இருந்து கிடைக்கும் எண்ணெயும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, பல நோய்களுக்குத் தீர்வும் அளிக்கக்கூடியது. தேங்காயில் இருந்து பால் எடுத்தும் பயன்படுத்துகிறார்கள். – இளநீரில் உடலின் நீர்த்தேவைக்கான எலக்ட்ரோலைட், பொட்டாசியம் உள்ளது.
தேங்காய் எண்ணெயில் பாதிக்கு மேல் நடுத்தரச் சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த அமிலங்களை நமது உடல் கொழுப்பாகச் சேமிக்காமல், உடல் வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான சக்தியாக மாற்றிக் கொள்கிறது. உடலைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் தடகள விளையாட்டில் இருப்பவர்களுக்கும் இது மிகவும் உகந்தது. மேலும் இந்தக் கொழுப்பு அமிலங்களில் ஒன்றான லாரிக் அமிலம் தாய்ப்பாலிலும் இருக்கிறது. லாரிக் அமிலம் மூளை செயல்பாட்டை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பாற்றலையும் மேம்படுத்துகிறது.

லாரிக் அமிலத்தை நமது உடல் மோனோலாரின் என்ற வேதிப் பொருளாக மாற்றுகிறது. இது வைரஸ் தொற்று, பாக்டீரியத் தொற்று, நுண்ணுயிர் தொற்று, பூஞ்சை தொற்று நோய்களுக்கு எதிரானது. நோய்களை ஏற்படுத்தும் பல்வேறு நுண்ணுயிர்களை அது அழிக்கிறது. இதன் மூலம் நமது உடல் நோய்த்தொற்றுகளாலும் வைரஸ்களாலும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது. தேங்காயை எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அதில் இருந்து இரும்புச் சத்து, செலினியம், சோடியம், சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரச் சத்து நமக்கு கிடைக்கிறது