FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 25, 2015, 08:57:48 PM

Title: ~ தோல் நோய்களை குணமாக்கும் அருகம்புல் - வெற்றிலை ஜூஸ் ~
Post by: MysteRy on June 25, 2015, 08:57:48 PM
தோல் நோய்களை குணமாக்கும் அருகம்புல் - வெற்றிலை ஜூஸ்

(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10563183_1464979627132841_3486488886149088896_n.jpg?oh=eac6a1fb2b373951c6466d8425946f85&oe=562674BC)

தேவையான பொருட்கள் :

அருகம்புல் – 1 கைப்பிடி அளவு
மிளகு – 5
வெற்றிலை – 1
தேன் – தேவைக்கு
தண்ணீர் – 200 மி.லி.

செய்முறை:

• மிளகை பொடித்து கொள்ளவும். அருகம்புல்லை நறுக்கி தண்ணீரில் கலந்து, பொடித்த மிளகு, வெற்றிலையையும் சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

• பின்பு வடிகட்டி தேன் கலந்து இளம் சூடாக பருக வேண்டும்.

• இந்த ஜூஸ் ஒவ்வாமையால் ஏற்படும் தோல் நோய்கள் மற்றும் விஷ கடியால் உண்டாகும் ஒவ்வாமை நீங்கும். நீடித்து இருக்கும் தோல் நோய்கள் நீங்க தினம் 100 மி.லி. அளவு இந்த குடிநீரை குடித்து வர வேண்டும்.