FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 21, 2015, 09:53:54 PM
-
நூடுல்ஸ் சாப்பிட்டவங்க இதை முதலில் குடிங்க! அருகம்புல் டிகாக் ஷன்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-7US64raA5Rc%2FVYadzaGD4YI%2FAAAAAAAAPVE%2FvcDJZK03-jQ%2Fs1600%2F222.jpg&hash=fcc5a324138ead8ea1ff1a107681b48b68ddcc6a)
நூடுல்ஸ் சாப்பிட்டவங்க இதை முதலில் குடிங்க!
நூடுல்ஸில் காரீயம் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அன்றாடம் அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்டவர்களுக்கு, ஒருவித பயம் இருந்துகொண்டேதான் இருக்கும். உடலில் அதிக அளவு உலோகங்கள் சேர்ந்தால், கல்லீரல் பாதிப்புகள், தீராத வயிற்றுவலி, அல்சர், புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வரலாம். உடலில் சேர்ந்த உலோகங்களை என்ன செய்வது? மூலிகை மருத்துவம் மூலம் நஞ்சான உடலை நலமாக மாற்றலாம்.
அருகம்புல், நச்சு நீக்கும் மூலிகை. தொடர்ந்து அருகம்புல் சாற்றை அருந்திவந்தால், உடலில் சேர்ந்திருக்கும் காரீயத்தை ஒரு வாரத்தில் வெளியேற்றும். அருகம்புல்லில் உள்ள பச்சையத்தின் அளவு 65 சதவிகிதம். நிறைவான நார்ச்சத்துக்களைக் கொண்டது. இதனால், வயிறு, பெருங்குடல், சிறுகுடல், கல்லீரல் ஆகிய இடங்களில் படிந்திருக்கும் உலோகங்களை மலம், சிறுநீர், வியர்வை மூலமாக வெளியேற்றிவிடும். அருகம்புல் டிகாக் ஷனைக் குடித்துவிட்டு, மூன்று மணி நேரத்துக்குப் பிறகுதான் எந்த உணவையும் சாப்பிட வேண்டும். வாரம் மூன்று முறை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், காரீயம் உள்ளிட்ட நச்சுக்கள் அகற்றப்படும். இந்த டிகாக் ஷனை ஒரு மாதம் வரை குடித்து வந்தாலே நச்சுக்கள் நீங்கிவிடும்.
அருகம்புல் டிகாக் ஷன்!
தேவையானவை:
அருகம்புல் - 10 கிராம், வெள்ளை மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், வெண்ணெய் அல்லது தயிர் - அரை டீஸ்பூன்
செய்முறை:
அருகம்புல்லை நன்றாகச் சுத்தம் செய்து, நீரில் அலச வேண்டும். 150 மி.லி நீரில் அருகம்புல், வெள்ளை மிளகு, சீரகத்தைப் போட்டுக் கொதிக்கவைத்து, அது 100 மி.லியாகச் சுண்டியதும், வெண்ணெய் அல்லது தயிர் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.