FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 21, 2015, 08:46:24 PM

Title: ~ 5 ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு ஜூஸ்! ~
Post by: MysteRy on June 21, 2015, 08:46:24 PM
5 ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு ஜூஸ்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F07%2Fndqyqy%2Fimages%2Fp66b%25281%2529.jpg&hash=a53c091537d3a15bb66475703a94738df1655b53)

ஷீலாபால்
ஊட்டச்சத்து நிபுணர்


தேவையானவை:

தோல் நீக்கி வட்ட வடிவமாக வெட்டிய அன்னாசிப்பழத் துண்டுகள் - 2, முலாம்பழம்  - பாதி, பப்பாளி - ஒரு சிறிய துண்டு (50 கிராம்), நடுத்தர வாழைப்பழம் - 1, பச்சை நிறத் திராட்சை - 25 கிராம், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு (விருப்பப்பட்டால்).

செய்முறை:

அன்னாசி மற்றும் திராட்சைப் பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சாறு எடுக்கவும். இதனுடன், முலாம்பழம், பப்பாளி, வாழை மற்றும் ஐஸ்கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் அருந்தவும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F07%2Fndqyqy%2Fimages%2Fp66a%25281%2529.jpg&hash=ee3beb0eef409683f8076384aa26853baad5e2dd)

பலன்கள்:

இதில், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், வைட்டமின் - ஏ, சி, கே மற்றும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பீட்டாகரோட்டின், ஃப்ளவனாய்டு, சிறிதளவு நார்ச்சத்து இதில் இருக்கின்றன. மலச்சிக்கல், உணவு உண்டவுடன் மலம் கழிக்கும் பிரச்னை (இரிட்டபிள் பவுல் சிண்்ட்ரோம்) உள்ளவர்கள், மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள், இதய நோயாளிகள் இந்த ஜூஸ் அருந்துவது மிகவும் நல்லது. தொடர்ந்து இந்த ஜூஸை எடுத்துக்கொள்வது, புற்றுநோய் ஆபத்தில் இருந்து காக்கும். சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும்,

சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது சிறிதளவு இந்த ஜூஸை எடுத்துக்கொள்ளலாம். தொண்டைக் கமறல் உள்ளவர்கள், விதை இல்லாத திராட்சையைத் தோல் நீக்கியும் அன்னாசிப்பழம் குறைவாகவும் சேர்த்துக்கொள்ளவும். ஏதாவது ஒரு பழம் அலர்ஜியாக இருப்பின், குறிப்பிட்ட பழத்தைச் சேர்க்காமல், ஜூஸ் செய்து அருந்துவது, அலர்ஜி, சைனஸ், தும்மல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. வளரும் குழந்தைகள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் பருக ஏற்றது.