FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 04, 2015, 01:38:28 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F06%2Fmzeyzj%2Fimages%2Fp66a.jpg&hash=8f4ba869476047803ab6db4e492ba570cda37dfd)
தேவையானவை:
அன்னாசி பழத்துண்டுகள் - 200 கிராம், புதினா - 10 கிராம், சர்க்கரை அல்லது தேன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை:
அன்னாசி பழத்துண்டுகள் மற்றும் புதினா, சர்க்கரை அல்லது தேன் மற்றும் ஐஸ்கட்டிகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஜூஸை வடிகட்டி, அருந்தவும்.
பலன்கள்:
வைட்டமின் சி மற்றும் பி 6 நிறைந்த ஜூஸ். பீட்டாகரோட்டின் மற்றும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள் இதில் உள்ளன. புதினா, இருமல், ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. தொண்டைக் கமறல், முகப்பரு இருப்பவர்கள், இந்த ஜூஸில் புதினாவை அதிக அளவு சேர்த்துப் பருகலாம். தோல் வறட்சி இருப்பவர்கள், உடலில் உள்ள நச்சுக்கள், மலச்சிக்கல் நீங்க, இந்த ஜூஸைப் பருகலாம். ஒரு உணவு வேளைக்கும் மற்றொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் அருந்தலாம். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் இந்த ஜூஸில் உண்டு. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் குடிக்கலாம். பொதுவாக, அனைவருமே சர்க்கரை, தேன் ஆகியவை சேர்க்காமல் அருந்துவது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு அரை கப் ஜூஸ் மட்டுமே போதுமானது. உணவு உண்ணும்போது இந்த ஜூஸையும் சேர்த்து அருந்தக் கூடாது. சிறுநீரகக் கோளாறுகள் இருப்பவர்கள், இந்த ஜூஸை அருந்த வேண்டாம்.