FTC Forum
Entertainment => Love & Love Only => Topic started by: AruN JoY on June 02, 2015, 07:19:39 AM
-
கவிதை எழுத தொடங்கியிருந்த காலம் அது
அலைகளுடன் அத்தனை அடுப்பம் ஒன்றும் இல்லை
அவள் என்றே ஒவ்வொரு கவிதையும்
எழுத தொடங்கியிருந்தேன்
“அவள்” என்பது கேள்விகுறி இல்லாத
கேள்வியாய் எப்போதும் என்னுள் இருந்ததாலோ
அவள் என தொடங்கும் பதில் கவிதையாய்
பாவித்து பாக்களை தொகுப்பதுண்டு
முடிவினில் அவள் என்பதற்கான விளக்கம்
அவளிடமிருந்தே பெற்றுக்கொண்டேன்
அவள் சொன்ன பதில்
அவள் அவளாக இல்லை
நானாக மாறிவிட்டதாய்
எனை தேடிய நான்
உன்னில் உனை கண்டறிய எத்தனித்தபோது
மீண்டும் ஆதியிலிருந்து தேடல் தொடரு என
அழைப்பு ஒன்றை விடுத்திருந்தாய்
அந்த தேடல் இன்று அலைகளோடும்
அதிகமான அடுப்பம் தந்திருக்கின்றன
பத்திரமாக இருக்கிறேனா நான் !
இல்லை இல்லை நாம் !