FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 25, 2015, 07:02:26 PM
-
ஒனியன் பிரைட் ரைஸ்
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11217815_1453762001587937_6443363131695850589_n.jpg?oh=da273883331410ad9e4044e4eda91a50&oe=560522A2&__gda__=1443120162_6483fa5dd86cbeb5e580d3c63532644b)
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1 1/2 டிஷ்
சின்ன வெங்காயம் – 12
குடை மிளகாய் – 1
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
பச்சைக் கற்பூரம் – 1/4 tsp
உப்பு – தேவையான அளவு
வெங்காயத் தாள் – 1
ஸோயா சாஸ் – 4 tbsp
செய்முறை
அரிசியை உதிரி உதிரியாக இருக்குமாறு தேவையான அளவு நீர் ஊற்றி வேக வைக்கவும்.
வெங்காயத்தை நன்கு சுத்தம் செய்து , தோல் நீக்கி, வட்ட வட்டமாக அரிந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கொதிக்கும் நீரை எடுத்துக் கொள்ளவும் குடை மிளகாயைக் கீறி அதில் இடவும்
சில நிமிடத்துக்குப் பின் அதை வெளியே எடுத்து விதைகளை நீக்கிக் கொள்ளவும். பின்னர், அதை வட்ட வட்ட வளையமாக வெட்டிக் கொள்ளவும்
தயாரிப்பு முறை
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெயைக் காயவிடவும். காய்ந்தவுடன் வெங்காயத்தை அதில் போட்டு நன்றாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் அதில் குட மிளகாய், பச்சைக் கற்பூரம், உப்பு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். இதில் வடித்து வைக்கப்பட்டிருக்கும் சோறை இடவும். இத்துடன் சோயா ஸாஸையும் இடவும்.
வெங்காயத் தாளையும் சற்றுப் பெரிதாக வெட்டிப் அதில் போடவும்.
இவ்வாறு ஐந்து நிமிடங்கள் வரை கிளறி பின் இறக்கி வைக்கவும். சுவையான ஒனியன் பிரைட் ரைஸ் தயார் .