FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 11, 2015, 02:22:44 PM
-
சாமை கொழுக்கட்டை & தினை சந்தவை !!
அரிசி என்றதும் நமக்கு நெல்லரிசி மட்டுமே நினைவுக்கு வருகிறது. எந்தத் தானியங்களிலும் தோலை நீக்கினால், அது அரிசிதான். வரகின் தோலை நீக்கினால், வரகரிசி; சாமையின் தோலை நீக்கினால், சாமையரிசி. நெல்லரிசியாக இருந்தாலும் சரி, சிறுதானிய அரிசியாக இருந்தாலும் சரி, வெள்ளையாக, பளபளப்பாக இருந்தால்தான் அதை வாங்குவதில் நாம் ஆர்வம் கட்டுகிறோம். இவ்வாறு பட்டை தீட்டப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வகைகளைப் பயன்படுத்துவதால், நமக்குத் தேவையான ஙி12 விட்டமின் கிடைப்பது இல்லை. இந்த விட்டமின் பற்றாக்குறை ஞாபகமறதியை அதிகப்படுத்தும்; மூளையை மழுங்கடிக்கும். இதைத் தடுக்க, பட்டை தீட்டப்படாத அரிசிகளைப் பயன்படுத்துவது நல்லது!
-
சாமை கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
சாமை அரிசி மாவு - 150 கிராம்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - 2 கொத்து
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
(உடைத்தது)
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fav%2F2015%2F05%2Fzmziyt%2Fimages%2Fp44c.jpg&hash=af7c2cbbac24eba7c98ebbdd4e4f5ed1eeb80387)
செய்முறை
எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சிறிது நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்தவுடன், அதில் சாமை அரிசி மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும். கையால் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி வேகவிடவும். இந்தக் கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவிடவும். புதினா அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம்.
பலன்கள்: நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு இது. தேங்காயில் இருக்கும் புரோட்டீன், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும். மாலை நேர சிற்றுண்டியாகச் செய்து தரலாம். சட்னி சேர்ப்பதால், அதில் உள்ள சத்துக்களும் அதிகம் கிடைக்கும்.
-
தினை சந்தவை
தேவையான பொருட்கள்
தினை அரிசி - 150 கிராம்
தேங்காய் - ஒரு மூடி (துருவியது)
ஏலக்காய் - இரண்டு
உப்பு - சிறிதளவு
வெல்லம் - 50 கிராம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fav%2F2015%2F05%2Fzmziyt%2Fimages%2Fp44d.jpg&hash=c3073f6086dba3115dcc952fa099b7c9e310eeb9)
செய்முறை
தினை அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவிடவும். அரிசியுடன் உப்பு சேர்த்து நன்கு மிருதுவாக கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து வேகவிடவும். வெந்ததும், மாவை இடியாப்ப அச்சில் வைத்து இடியாப்பமாகப் பிழிந்து எடுத்தால், சந்தவை ரெடி.
தேங்காயை பாகாக்கி, அதில் வெல்லம் ஏலக்காய் சேர்த்து சந்தவையோடு சாப்பிட சுவையாக இருக்கம்.
பலன்கள்: தினையில் பீட்டாகரோட்டின் அதிகம் என்பதால், கண் பார்வைக்கு உதவும். நார்ச்சத்தும் தேவையான அளவு இருக்கிறது. வெல்லமும் தேங்காய்ப்பால் சேர்வதால், இரும்புச் சத்து கிடைக்கும்!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fav%2F2015%2F05%2Fzmziyt%2Fimages%2Fp44e.jpg&hash=ff5dfbcc95839753ae96c193cfaa2b5e130ec5f8)
கோடை விடுமுறையில், குழந்தைகளை என்ன செய்வது எனத் தெரியாமல் டி.வி முன்பு உட்கார வைத்துவிடுகிறோம். இதில் குழந்தைகள் அதிக நேரம் பார்ப்பது சண்டைக் காட்சிகளைத்தான். வீடியோ கேம்ஸ், கார் ரேஸ்... என குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுக்கள்கூட வன்முறையைத்தான் சொல்லித்தருகின்றன. இவை ஆளுமைத்திறனையே பாதித்துவிடும். அதற்குப் பதிலாக, நேரம் இருக்கும்போது வெளியே அழைத்துச் செல்வது, நூலகங்களில் வாசிக்கப் பழக்குவது, இயற்கையைக் காப்பது பற்றி சொல்லித்தருவது, செடி வளர்க்க ஊக்குவிப்பது, திருவிழாக்களுக்கு அழைத்துப்போவது... என ஆரோக்கியமான விஷயங்களைச் சொல்லித்தரலாம். பாதுகாப்பான செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மூலம், உயிரினங்களிடம் அன்பைப் பகிர, குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்!