FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 29, 2015, 01:52:39 PM

Title: மௌன புரட்சி .....
Post by: aasaiajiith on April 29, 2015, 01:52:39 PM

மௌன புரட்சி
மௌனம்
என் மௌனம்
மௌன மொழி
மௌன பாஷை
மௌன வார்த்தை
மௌனகீதம்
மௌனராகம்
மௌன யுத்தம் என
சிலநாட்களாய்
அப்புறம் இப்புறம்
என திரும்பும் எப்புறமும் ,
மௌனம்,மௌனம்,மௌனமே ...

அடியே !
மௌனமான என்
மௌனமொழியாளே !

அறுபதாண்டு வரலாறு கொண்ட கழகத்திற்கே
கொள்கைரீதியாய் தம் கொள்கை பரப்பிட
ஒரே ஒரு கொள்கைபரப்புச்செயலாளர் தான்
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது ??
எட்டுத்திக்கும் உன் கொள்கை தனை
பல கொள்கைபரப்புச்செயலாளர் கொண்டு
மொட்டவிழும் மௌனத்தையும் மிஞ்சிடும்விதம்
மௌனமாய் ஓர் மௌன புரட்சி செய்திட ......
Title: Re: மௌன புரட்சி .....
Post by: Maran on April 30, 2015, 12:11:19 AM




அழகான கவிதை வரிகள் நண்பரே...


என் கவிநடையில் எதார்த்தமாய் புரிந்து கொள்கிறேன் !!!  :)


மனதை காதலியாக்கி, அந்த காதலி மௌன விரதம் இருப்பதாய் அழகாக அரசியல்
கலந்து கொடுத்துள்ளீர்கள்! உண்மையில் மனம் மௌனவிரதம் இருக்கும்பொழுதுதான் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும். இந்த எதிர்மறையான எதார்த்தத்தில் இருந்தே புரிதல் தொடங்குகிறது.


அழகான வரிகளில் மௌன புரட்சி  :) பாராட்டுக்கள்...




Title: Re: மௌன புரட்சி .....
Post by: aasaiajiith on May 04, 2015, 11:23:03 AM
புரிதலில் மனம் நிறைந்த பூரிப்பு !!

வந்து
வாசித்து
வாழ்த்து
வழங்கியமைக்கு
நன்றி !!