FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 28, 2015, 09:08:55 PM
-
சோள கொழுக்கட்டை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F05%2Fmdaymu%2Fimages%2Fp50a.jpg&hash=d53c2dc7a71339c12858e44bb80ccbae04065ffb)
தேவையானவை:
சோளம் - 200 கிராம், சின்ன வெங்காயம் - 5, நறுக்கிய கேரட், தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி (சேர்த்து) - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
சோளத்தை மிதமான தீயில் வறுத்து, நைஸாக அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். சோள மாவுடன் உப்பு, நெய் சேர்த்துப் பிசிறி, தண்ணீர் தெளித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கவும். ஆவியில் வேகவைத்த சோள மாவை காய்கறிக் கலவையுடன் நன்கு கலந்து, கொழுக்கட்டைகளாகப் பிடித்து மீண்டும் ஆவியில் வேகவிட்டு எடுத்து, பரிமாறவும்.
புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது... சோளம்!