FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 28, 2015, 08:53:59 PM

Title: ~ மங்களூரியன் குழம்பு ~
Post by: MysteRy on April 28, 2015, 08:53:59 PM
மங்களூரியன் குழம்பு

(https://scontent-nrt.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/11178286_1445464925750978_2329037517451005049_n.jpg?oh=ff1145e64ca22d2a3297c3b9cb4c3eee&oe=5597E16E)

சிக்கன் அரைகிலோ
எண்ணெய் 3டேபிள் ஸ்பூன்
வெங்காயம் 2
தேங்காய் 3/4 கப்.
தண்ணீர் 4 கப்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிது

மசாலாவிற்கு

எண்ணெய்2 டீஸ்பூன்
தேங்காய் அரைகப் துருவியது
வரமிளகாய் 8
மல்லி 2 டீஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
கடுகு 1/4 டீஸ்பூன்
வெந்தயம் 1/4 டீஸ்பூன்
பட்டை 2 இன்ச்
மிளகு 1/4 டீஸ்பூன்
கிராம்பு 3
மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்
புளி 1 நெல்லிக்காய் அளவு
இஞ்சி 1இன்ச்
பூண்டு 5 பற்கள்
வெங்காயம் அரை கப் பொடியாக நறுக்கியது.

தேங்காய் பால் எடுக்கும் முறை :

முதலில் 3/4 கப் துருவிய தேங்காயை 3/4 கப் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து பால் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைத்து பால் எடுத்து கொள்ள வேண்டும். பின் இரண்டையும் தனித்தனியாக வைத்து கொள்ள வேண்டும.

எப்படி செய்வது?

மசாலாவிற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து கொள்ள வேண்டும். பின் அதே வாணலியில் மீண்டும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மல்லி, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அத்துடன் சீரகம், கடுகு, வெந்தயம், பட்டை, கடுகு, கிராம்பு ஆகிவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி குளிர வைக்க வேண்டும். பின்பு புளியை நீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு மிக்சியில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் வெங்காயம், பூண்டு, இஞ்சி, புளி, ஆகியவற்றை, சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் அத்துடன் எடுத்து வைத்துள்ள 2 கப் தேங்காய் பாலில் இருந்து அரை கப் தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம். கிரேவிக்கு ஒரு அகன்ற வானலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக 5-7 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் பிரட்டி, பின் அதில் ஒன்றை கப் தேங்காய் பால் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்துவிட்டால், அதில் மீதமுள்ள 3/4 கப் தேங்காய் பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கி கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து தூவினால் மங்களூரியன் சிக்கன் குழம்பு ரெடி.