(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-JEJjHA5QXjY%2FVTJGTq4KFtI%2FAAAAAAAAPMQ%2FHTGx2vgyKG0%2Fs1600%2F111111.jpg&hash=67e6dc9c7028cf8c3350b84d66c5e834c39b2b83)
கோடை காலம் வந்தாலே, தாகம் தாகம் எனத் தண்ணீரும் பானங்களும் குடித்தே, வயிறு நிரம்பிவிடும். ஆனால், உடல் இயங்க, இவை மட்டும் போதாது. வியர்வையால், உடலில் உள்ள தண்ணீரோடு சத்துக்களும் வெளியேறிவிடும். இந்தச் சத்துக்களை வெறும் தண்ணீராலும் பானங்களாலும் மட்டுமே ஈடு செய்ய முடியாது. இதற்காகவே, இயற்கை நமக்கு நிறைய காய்கறிகளையும், பழங்களையும் அளித்திருக்கிறது.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F05%2Fzmqmfj%2Fimages%2Fp70%25282%2529.jpg&hash=728b06797adfe61a537b42ee06df46b5e68ad8c9)
கோடை காலத்தில் விளையும், அத்தனை காய்கறிகளும் பழங்களும் நீர்ச்சத்து கொண்டவை. 'வெயில் வந்தால் எடு வெள்ளரியை' என்று சொல்வது நீர்ச்சத்துக்காகத்தான். வெள்ளரி, பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், முள்ளங்கி, தர்பூசணி என, கோடையில் விளையும் அத்தனை காய்களும், நீர்க்காய்கள் என்பதுதான், இயற்கையின் ரகசியம். பீட்ரூட், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, புரோக்கோலி என, நம் சமையலறையில் நிறைந்துகிடக்கும் காய்களை, இந்தக் கோடை காலத்தில் சற்றே ஒதுக்கிவைப்போம். நம்மைக் காத்துக்கொள்ள, இயற்கை நமக்கு அளித்திருக்கும் காய்கறிகளைச் சமைப்பதன் மூலம், கோடையைச் சோர்வின்றிக் கடந்துசெல்வோம். நீர்க்காய்களில், நார்ச்சத்தும் அதிகம் இருக்கும் என்பதால், கோடையில் நீர் இழப்பினால் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இந்தக் காய்கள் நல்ல தீர்வாக இருக்கும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F05%2Fzmqmfj%2Fimages%2Fp71.jpg&hash=0210e279cb8c67c9b8a0012e47c11271db01cdbe)
இது சுரைக்காயா, பீர்க்கங்காயா? இதைப் பொரியல் பண்ணணுமா, குழம்பு செய்ய முடியுமா?' முதல்முறை சமைக்கத் தொடங்குபவர்களுக்கு, இந்தக் குழப்பம் வரும். உங்களுக்காகவே நீர்க்காய்களில் செய்யும், எளிதான ரெசிப்பிகளைத் தந்துள்ளார், சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா. பொரியல், கூட்டு தொடங்கி குழிப்பணியாரம், அல்வா வரை ஒருநாளின் எல்லா உணவுகளையும் இந்தக் காய்களில் செய்துகாட்டியிருக்கிறார். ரெசிப்பிகளின் பலன்களைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி. இந்தக் கோடை விடுமுறையைச் சத்தான நீர்க்காய்களோடும் சுவையான ரெசிப்பிகளோடும் கொண்டாடுங்கள்...